உங்கள் PF கணக்கில் முறையாக தொகை செலுத்தப்படுகிறதா? – அறிந்து கொள்ளும் & புகார் முறை!

0
உங்கள் PF கணக்கில் முறையாக தொகை செலுத்தப்படுகிறதா? - அறிந்து கொள்ளும் & புகார் முறை!
உங்கள் PF கணக்கில் முறையாக தொகை செலுத்தப்படுகிறதா? - அறிந்து கொள்ளும் & புகார் முறை!
உங்கள் PF கணக்கில் முறையாக தொகை செலுத்தப்படுகிறதா? – அறிந்து கொள்ளும் & புகார் முறை!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது பலவகையான முறைகளில் PF கணக்கில் உள்ள இருப்பை அறிந்து கொள்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும், அவற்றில் ஏதேனும் புகார்கள் இருப்பின் அவற்றை தெரிவிக்கும் முறை குறித்தும் இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF கணக்கின் இருப்பு:

ஊழியர்களின் மாத வருமானத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் அவர்களின் வருங்கால வைப்பு நிதியாக வரவு வைக்கப்படும். ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனமும் அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை வழங்கும். இந்த தொகைக்கு ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் குறிப்பிட்ட சதவீதத்தில் வட்டி வழங்கப்படுகிறது. ஆனால், சில நேரங்களில் நீங்கள் பணியாற்றும் நிறுவனம் தங்கள் பங்கு தொகையை செலுத்த தவறி இருக்கலாம் அல்லது EPFO அமைப்பு உங்கள் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டியை செலுத்தாமல் இருக்கலாம்.

இதனால், நாம் அவ்வப்போது நமது PF கணக்கில் உள்ள தொகையை சரிபார்த்துக் கொள்வது அவசியமாகும். இதற்கு EPFO அமைப்பு நான்கு வழிமுறைகளை அளித்துள்ளது.

PF கணக்கு இருப்பை ஆன்லைனில் சோதிக்கும் முறை:

  • முதலில் பயனர்கள் www.epfindia.gov.in என்ற EPFO-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், Our services என்ற தலைப்பின் கீழ் உள்ள for employees என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும்.
  • அதில், member passbook என்பதை தேர்வு செய்து, உங்கள் தனிப்பட்ட UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டை பதிவு செய்து உங்கள் கணக்கில் உள்ள தொகையை அறிந்து கொள்ள முடியும்.
Exams Daily Mobile App Download

PF கணக்கு இருப்பை Umang செயலி மூலம் சோதிக்கும் முறை:

  • Umang செயலியை பதிவிறக்கம் செய்து, அதில், EPFO க்கான ஆப்சன்களை தேர்வு செய்து உங்களது விவரங்களை பதிவு செய்து கணக்கில் இருப்பை அறிந்து கொள்ளலாம்.
  • SMS மூலம் PF கணக்கு இருப்பை அறிந்து கொள்ளும் முறை:
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணிற்கு EPFOHO UAN ENG என்று எஸ்எம்எஸ் செய்து, கணக்கின் இருப்பை அறிந்து கொள்ளலாம்.

தமிழக பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ் – மீறினால் அதிரடி நடவடிக்கை!

மிஸ்டு கால் மூலம் PF கணக்கு இருப்பை அறிந்து கொள்ளும் முறை:

PF கணக்கின் UAN நம்பரில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 011-22901406 என்ற எண்ணுக்கு, மிஸ்டு கால் கொடுத்து PF கணக்கு இருப்பை அறிந்து கொள்ளலாம்.

புகார் தெரிவிக்கும் முறை:

ஒருவேளை உங்கள் PF கணக்கில் இருப்பு தொகை சரியாக இல்லை என்பதை நீங்கள் அறிந்தால், முதலில் www.epfigms.gov.in என்ற இணையதளத்தில் இருந்து இதற்கான புகாரை அளிக்க முடியும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!