PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பண இழப்பை தவிர்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

0
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - பண இழப்பை தவிர்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு - பண இழப்பை தவிர்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!
PF கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு – பண இழப்பை தவிர்ப்பது எப்படி? முழு விவரம் இதோ!

EPFO அமைப்பு தனது உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மோசடி கும்பலிடம் இருந்து உறுப்பினர்கள் தங்களுடைய பணத்தை எப்படி பாதுகாத்துக் கொள்வது குறித்த வழிமுறைகள் உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்றாகும். அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதார்ந்த சம்பளத்தில் தொழில் தருநர் சார்பிலும், தொழிலாளர் சார்பிலும் பங்களிப்புச் செய்வதாகும். இந்த பங்களிப்பு பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் பெற்றுக் கொள்ளலாம். EPFO அமைப்பு பிப்ரவரி 2022 இல் 14.12 லட்சம் நிகர சந்தாதாரர்களைச் சேர்த்துள்ளது.

WhatsApp பயனர்கள் கவனத்திற்கு – மெஸேஜ்களுக்கு எமோஜி மூலம் ரியாக்ட் செய்வது எப்படி?

இது கடந்த ஆண்டு இதே மாதத்தின் புதிய பதிவுகளுடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் அதிகமாகும். இந்நிலையில் மோசடி கும்பல்களிடம் இருந்து தங்கள் பணத்தை எப்படி பாதுகாப்பது பற்றிய தகவலை, தற்போது EPFO, தனது உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இருந்து ட்வீட் செய்துள்ளது. முதலில் EPFO விவரங்களை சமூக ஊடங்களில் அல்லது OTP மூலம் தொலைபேசியில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், EPFO தனது உறுப்பினர்களை ஆதார் எண், பான் எண், வங்கி கணக்கு அல்லது OTP போன்ற தனிப்பட்ட விவரங்களை செல்போன் மூலம் கேட்காது என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த மாதிரியான போலியான அழைப்புகள் வந்தால் தங்கள் சுய விவரங்களை சொல்ல கூடாது என கூறியுள்ளது. EPFO உறுப்பினர்கள் தங்கள் ஆவணங்களை ஆன்லைனில் எப்படி பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதை அறிந்திருக்க வேண்டும் என EPFO வலியுறுத்தியுள்ளது. உறுப்பினர்கள் DigiLocker ல் கிடைக்கும் சில EPFO சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.

Exams Daily Mobile App Download

DigiLocker என்பது ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சேமிப்பதற்கும் பகிர்வதற்கும் சரிபார்ப்பதற்கும் பாதுகாப்பான கிளவுட் அடிப்படையிலான தளமாகும். இந்த ஆப் பில் கிடைக்கும் EPFO சேவைகள்,” UAN அட்டை ,ஓய்வூதியம் செலுத்தும் ஆணை (PPO), திட்டச் சான்றிதழ்” ஆகும். தற்போது இந்த சேவைகளை பெற டிஜிலாக்கரில் பதிவு செய்ய வேண்டும், அதன் பிறகு டிஜிலாக்கரில் ஆவணங்களைப் பெற வேண்டும். மேலும் தகவலுக்கு EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here