PF பயனர்கள் கவனத்திற்கு – இனி EPF கணக்கில் இது கட்டாயம்? முக்கிய அறிவிப்பு!

0
PF பயனர்கள் கவனத்திற்கு - இனி EPF கணக்கில் இது கட்டாயம்? முக்கிய அறிவிப்பு!
PF பயனர்கள் கவனத்திற்கு - இனி EPF கணக்கில் இது கட்டாயம்? முக்கிய அறிவிப்பு!
PF பயனர்கள் கவனத்திற்கு – இனி EPF கணக்கில் இது கட்டாயம்? முக்கிய அறிவிப்பு!

பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்கள் வரும் டிச.31ம் தேதிக்குள் தங்களது கணக்கில் நாமினியை சேர்க்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவறும் பட்சத்தில் PF சந்தாதாரர்கள் EPF பலன்களை அனுபவிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

நாமினி சேர்ப்பு

அடுத்த மாதம் முதல் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கணக்கில் புதிய விதிகள் அமலுக்கு வரும் என்பதால், சந்தாதாரர்கள் வரும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் தங்கள் EPF கணக்கில் குறிப்பிட்ட மாற்றத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, PF கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கில், குடும்ப உறுப்பினர்களை நாமினியாக சேர்ப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அகால மரணம் எதுவும் நிகழ்ந்தால் PF பயனரது சேமிப்பு நிதி நாமினிக்கு சரியான நேரத்தில் கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

தமிழகத்தின் இம்மாவட்டத்தில் டிச.20 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

அந்த வகையில் அனைத்து PF கணக்கிலும் நாமினியை சேர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட கால அவகாசம் இந்த மாத இறுதியுடன் முடிவடைகிறது. அதனால் விரைந்து இந்த செயல்பாடுகளை முடிக்க வேண்டும் என பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), தனது உறுப்பினர்களை கேட்டுக்கொண்டுள்ளது. இப்போது பயனர்கள் EPF, EPS பரிந்துரைகளை டிஜிட்டல் முறையில் epfindia.gov.in என்ற EPFO இணையதளத்தில் உள்நுழைந்து சமர்ப்பிக்கலாம். புதிய PF நியமனத்தை தாக்கல் செய்வதன் மூலம் EPF கணக்கு வைத்திருப்பவர் தனது EPF கணக்கு நாமினியை மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்போது EPF உறுப்பினர் தனது கணக்கில் நாமினியை ஆன்லைனில் மாற்றிக்கொள்ளவும் முடியும். அந்த வகையில் புதிய PF நியமனத்தை தாக்கல் செய்வதன் மூலமும் இதை மேற்கொள்ளலாம். இது தொடர்பாக EPFO அமைப்பு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில், ‘#EPF உறுப்பினர்கள் தற்போதுள்ள EPF/#EPS நியமனத்தை மாற்ற புதிய வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இப்போது PF நியமனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாமினியின் பெயர் இறுதியானதாகக் கருதப்படும்.

இப்போது ஆன்லைனில் EPF கணக்கு நாமினியை மாற்ற:
  • EPF உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை திறக்கவும்.
  • உள்நுழைந்த பிறகு Employees பகுதிக்குச் சென்று Member UAN/Online Service என்பதை கிளிக் செய்யவும்.
  • இப்போது UAN மற்றும் கடவுச்சொல் மூலம் உள்நுழையவும்.
  • இதில் Manage என கொடுத்து E-Nomination என்பதைக் கிளிக் செய்யவும்.
  • குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க yes என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது Add Family Details என்பதைக் கிளிக் செய்து, ஒன்றுக்கும் மேற்பட்ட நாமினிகளை சேர்க்கலாம்.
  • மொத்த பங்குத் தொகையை அறிவிக்க Nomination Details என்பதைக் கிளிக் செய்து, Save EPF Nomination என கொடுக்கவும்.
  • இப்போது OTP ஐ உருவாக்க e-Sign என்பதை கிளிக் செய்யவும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்ட OTP ஐ இப்போது சமர்ப்பிக்கவும்.
  • OTP இன் வெற்றிகரமான சரிபார்ப்புக்குப் பிறகு, உங்கள் நியமனம் வெற்றிகரமாக EPFO இல் பதிவு செய்யப்படும்.
  • இந்த மின்-நாமினேஷனுக்குப் பிறகு, மேலும் ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தேவையில்லை.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!