தமிழகத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர் கவனத்திற்கு – நாளை (அக்.3) 4வது மெகா முகாம்!
தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. ஏற்கனவே மூன்று மெகா தடுப்பூசி முகாம்களை தொடர்ந்து நாளை நான்காவது தடுப்பூசி முகாம் நடத்தப்படவுள்ளது.
தடுப்பூசி முகாம்:
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்தது. நோய்த்தொற்று பரவும் விகிதத்தை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்து வந்தது. தமிழகத்தில் கொரோனா 2ம் அலையை தொடர்ந்து 3ம் அலை பரவும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கோரப்பட்டது.
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் – வானிலை ஆய்வு மையம்!
அதனை குறைக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்தது. திருப்பூர் மற்றும் கோவை பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வந்ததன் காரணமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதுவரை 3 தடுப்பூசி முகாம்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தொடர்ந்து நாளை நான்காவது தடுப்பூசி முகாம் நடத்த தயாராகி வருகின்றனர். தற்போது 24,98,365 தடுப்பூசிகள் கையிருப்பு இருப்பதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
ரேஷன் கார்டில் ஆதார் அப்டேட் செய்வது அவசியம்- 5 நிமிடங்கள் போதும்!
கடந்த மாதம் நடத்தப்பட்ட மூன்று தடுப்பூசி முகாம்களில் அதிகபட்சமாக 1 கோடியே 42 லட்சத்து 66 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 கோடியே 23 லட்சத்து 9 ஆயிரத்து 370 தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கி உள்ளது எனவும் எனவே இந்த மாதம் 1 கோடி தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியுள்ளார்.