PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க போறீங்களா? – 1 நேரத்தில் பணம் கிடைக்கும்! வழிகள் இதோ!

0
PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க போறீங்களா? - 1 நேரத்தில் பணம் கிடைக்கும்! வழிகள் இதோ!
PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க போறீங்களா? - 1 நேரத்தில் பணம் கிடைக்கும்! வழிகள் இதோ!
PF கணக்கில் உள்ள தொகையை எடுக்க போறீங்களா? – 1 நேரத்தில் பணம் கிடைக்கும்! வழிகள் இதோ!

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிஎப் கணக்குகள் தொடங்கப்பட்டு மாதந்தோறும் ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உங்களது பிஎஃப் கணக்கில் உள்ள தொகையை எவ்வாறு எளிமையாக எடுப்பது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

பிஎப் தொகை:

இந்தியாவில் பிஎப் கணக்கு வந்துள்ள மக்கள் தங்களின் பொருளாதார நெருக்கடி சூழலில் அவ்வப்போது பணத்தை எடுத்து கொள்கின்றனர். தேவைப்படும் போது ஆன்லைன் வாயிலாக பணத்தை எடுத்து கொள்ளும் வாய்ப்பை EPFO வழங்குகிறது. இந்த EPFO அமைப்பு, பிஎப் கணக்குதாரர் இறந்தால் வருங்கால வைப்பு நிதி பணத்தை அவரின் குடும்பத்திற்கு வழங்குகிறது. அதற்கு கணக்குதாரர் தங்களுக்கென ஒரு நாமினியை தேர்வு செய்ய வேண்டும். கடந்த 2020-21ம் நிதியாண்டுக்கான பிஎப் தொகைக்கு 8.5 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் பிஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முதலீட்டுடன் சேர்த்து அதிக தொகை கிடைத்துள்ளது. தற்போது இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் பலரும் தங்களின் பிஎப் கணக்கில் உள்ள தொகையை எடுக்க முயற்சி செய்து வருகின்றனர். அதனால் அவசர தேவையினை கருத்தில் கொண்டு நீங்கள் ஆன்லைனில் கிளைம் செய்த 1 மணி நேரத்திற்குள்ளேயே வங்கி கணக்கில் பிஎஃப் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பிஎஃப் கணக்கில் வட்டித்தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.

500 ஊழியர்களை தடாலடியாக வீட்டுக்கு அனுப்பிய பிரபல தனியார் நிறுவனம் – திண்டாடும் பணியாளர்கள்!!

Exams Daily Mobile App Download

பிஎப் தொகையை பெறும் முறைகள்:

  • முதலில் www.epfindia.gov.in இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில் “ஆன்லைன் அட்வான்ஸ் க்ளைம்” என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆன்லைன் சேவைக்கு சென்று கிளைம் என்பதை கிளிக் செய்து வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றை உள்ளிடவும்.
  • அதன் பிறகு பிஎப் அட்வான்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து பணம் எடுப்பதற்கான காரணம்,
    தொகை, காசோலை செய்யப்பட்ட நகல் போன்றவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அடுத்தாக “Get Aadhar” என்பதை கிளிக் செய்தால் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு OTP வரும்
  • அந்த ஓடிபியை உள்ளிட்ட பிறகு ஒரு மணி நேரத்திற்குள் உங்கள் கணக்கில் பிஎஃப் பணம் வந்து சேர்ந்து விடும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!