EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முதலீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு!

0
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முதலீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு - முதலீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு!
EPFO கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – முதலீட்டு வரம்பு குறித்த அறிவிப்பு!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (EPFO) தனது முதலீட்டு விதிமுறைகளை மாற்றும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இருப்பினும் தற்போது ஈபிஎஃப்ஓ அறங்காவலர்கள் கூட்டத்தில் பங்கு முதலீட்டு வரம்பை 20 சதவீதமாக உயர்த்தும் திட்டம் எடுபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முக்கிய தகவல்:

EPFO நிறுவனம் பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கடன் பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்கிறது. இதில் பங்குச் சந்தையில் நேரடியாக பங்குகளாக அல்லாமல் ETF களில் முதலீடு செய்கிறது. மேலும் பங்குச் சந்தை, அரசு பத்திரங்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றில் EPFO எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்கு விகிதாச்சார வரம்புகளும் உள்ளன. தற்போது EPFO 15% வரையிலான நிதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து வருகிறது. இந்நிலையில் ஜூலை 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் EPFO அறங்காவலர் குழு கூட்டத்தில் பங்குச் சந்தை முதலீட்டு வரம்பை 20% ஆக உயர்த்துவது பற்றிய முன்மொழிதல் வைக்கப்படும் என்ற தகவல்கள் முன்னதாக வெளியானது.

Exams Daily Mobile App Download

இந்த தகவலின் படி, இதற்கு EPFO அறங்காவலர் குழு ஒப்புதல் அளித்தால் இனி EPFO திட்டங்களில் ஊழியர்கள் முதலீடு செய்துள்ள மொத்த தொகையில் 20% நிதி பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்தவற்றில் முதலீடு செய்யப்படும் என எதிர்பார்ப்புகள் நிலவி வந்தது. இருப்பினும் இந்நிலையில் ஓய்வூதிய நிதி அமைப்பான EPFO தனது அறங்காவலர்கள் கூட்டத்தில் ஊழியர்களின் பிரதிநிதிகளின் கூடுதல் ஆலோசனையின் கோரிக்கையைத் தொடர்ந்து, பங்குகளில் முதலீட்டு வரம்பை தற்போதுள்ள 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக உயர்த்துவதற்கான முன்மொழிவை எடுக்கவில்லை. இது குறித்து பேசிய EPFO அறங்காவலர் ஹர்பஜன் சிங் சித்து, “பங்கு அல்லது பங்கு தொடர்பான கருவிகளில் முதலீட்டை மேம்படுத்துவதற்கான முன்மொழிவு ஜூலை 29 மற்றும் 30ம் தேதிகளில் நடந்த மத்திய அறங்காவலர் குழு 231 வது கூட்டத்தில் எடுக்கப்படவில்லை” என்றார்.

10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு பதிவு – அறிவிப்பு வெளியீடு

இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (EPFO) செயற்குழு கூட்டத்தில் இந்த முன்மொழிவை ஊழியர்களின் பிரதிநிதிகள் எதிர்த்ததாக சித்து தெரிவித்தார். மேலும் ஈபிஎஃப்ஒவின் முதலீட்டு முறையைத் திருத்துவதற்கு முன், பங்கு தொடர்பான கருவிகளில் முதலீட்டு நிதி ஒதுக்கீட்டை தற்போதுள்ள 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்க முன்மொழிவு குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும் என்று அவர் கருதினார். 231 வது CBT கூட்டத்தின் திருத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி, பங்கு அல்லது தொடர்புடைய திட்டங்களில் முதலீட்டை உயர்த்தும் திட்டம் திரும்பப் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, ஈபிஎஃப்ஓ, ஈக்விட்டி அல்லது ஈக்விட்டி தொடர்பான திட்டங்களில் முதலீடு செய்யக்கூடிய டெபாசிட்களில் 5 முதல் 15 சதவீதம் வரை முதலீடு செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!