PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!

0
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு - EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!

வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்கள் வருகின்ற டிச.31ம் தேதிக்குள்ளாக தங்களது PF கணக்கில் நாமினியை இணைந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

EPFO அறிவிப்பு

அனைத்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சந்தாதாரர்களும் வரும் டிச.31ம் தேதிக்குள் தங்களது கணக்கில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையென்றால் புதிய விதிகள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அமலுக்கு வரும் என்று தனது EPFO அமைப்பு தனது சந்தாதாரர்களை எச்சரித்துள்ளது. அதாவது EPFO அமைப்பின் ஊழியர்கள் டிச.31ம் தேதிக்கு முன்பாக தங்களது கணக்குடன் நாமினியை இணைத்திருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் வாகன ஆவணங்கள் செல்லுபடி காலம் டிச.31 வரை நீட்டிப்பு – உத்தரவு பிறப்பிப்பு!

இந்த அறிவிப்புகளை செயல்படுத்தாவிட்டால் PF பயனர்கள் ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்ட சில சேவைகளை இழக்க நேரிடும் என்று எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், மாத சம்பளம் பெறும் அனைத்து ஊழியர்களும் தங்களது எதிர்கால சேமிப்புக்காக EPFO அமைப்பில் கணக்கு வைத்துள்ளனர். ஒவ்வொரு மாதமும் ஊழியர்கள் பெறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை அவர்களின் PF கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. அதே போல ஊழியர்கள் வேலை செய்து வரும் அலுவலகமும் ஊழியர்கள் சார்பில் ஒரு தொகையை வரவு வைக்கும்.

இப்போது PF சந்தாதாரர்கள் தங்களது கணக்கில் டிச.31ம் தேதிக்கு முன்பாக நாமினியை இணைந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நாமினி PF பயனரின் மனைவி, கணவன், குழந்தைகள், பெற்றோர்கள் போன்ற குடும்ப உறுப்பினர்களாக இருக்க வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது. இப்போது, EPFO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நாமினியை இணைக்க சில எளிய வழிமுறைகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில்,

  • முதலாவதாக epfindia.gov.in என்ற இணையதளத்தை திறக்கவும்.
  • அதில் service என்பதை கிளிக் செய்யவும்.
  • இதில் கொடுக்கப்பட்டுள்ள for employees என்ற தேர்வை தேர்ந்தெடுக்கவும்.
  • பிறகு Member UAN / online service (OSC/OTP) என்பதை தேர்ந்தெடுக்கவும்.
  • இதில் UAN எண் மற்றும் கடவுச்சொல்லை வைத்து உள்நுழையவும்.
  • Manage Tab பக்கத்தில் E-nomination என்பதை தேர்வு செய்யவும்.

ATM பண பரிவர்த்தனைகளுக்கு ஜன.1 முதல் கூடுதல் கட்டணம் – ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

  • அடுத்ததாக provide details என்பதில் Save என்று கொடுக்கவும்.
  • பிறகு Yes என்று கொடுத்து Add family details என்பதில் குடும்ப நாமினி விவரங்களை சேர்க்கலாம்.
  • தொடர்ந்து save PDF nomination என்று கொடுத்தால் உங்கள் கணக்கில் நாமினி விவரங்கள் சேர்க்கப்படும்.
  • பிறகு select E-Sign என்பதை கிளிக் செய்து, OTP எண்ணை உள்ளிட்டால், உங்கள் மொபைல் எண் ஆதார் என்னுடன் இணைக்கப்பட்டிருக்கிறதா என்ற விவரங்கள் கிடைக்கும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!