உங்களின் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெற இதை மட்டும் செய்தால் போதும்!!

0
உங்களின் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெற இதை மட்டும் செய்தால் போதும்!!
உங்களின் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெற இதை மட்டும் செய்தால் போதும்!!
உங்களின் ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெற இதை மட்டும் செய்தால் போதும்!!

இந்தியாவில் தனி நபரின் அடையாள அட்டையாக விளங்கும் ஆதார் கார்டு ஆனது அனைத்து பயன்பாடுகளுக்கும் தேவைப்படுகிறது. இந்த நிலையில் நீங்கள் எதிர்பாராத விதமாக ஆதார் அட்டையை தொலைத்து விட்டீர்களா? திரும்ப பெறுவதற்கான வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.

ஆதார் அட்டை

இந்தியாவில் அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் ஆதார் கார்டு வாயிலாக செயல்படுத்தப்படுகிறது. தற்போது வங்கி கணக்கு, பான் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன் ஆதார் இணைக்க வேண்டியது கட்டாயமாகும். அதனால் ஆதாரில் உங்களின் பெயர், முகவரி, மொபைல் எண் ஆகிய விவரங்கள் அனைத்தும் சரியானதாக இருக்க வேண்டும். மேலும் தற்போது ஆதார் கார்டுகளை பயன்படுத்தி வங்கிகளில் கடன் கூட வாங்க முடிகிறது. அதனால் நீங்கள் ஆதார் கார்டை பாதுகாப்பானதாக வைத்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

ஒருவேளை ஆதார் கார்டை நீங்கள் தொலைத்துவிட்டாலோ அல்லது உங்களின் ஆதார் கார்டு திருடப்பட்டு விட்டாலோ கவலை வேண்டாம். உங்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி உங்களின் ஆதார் கார்டை மீண்டும் பெற முடியும். அத்துடன் இதனை நீங்கள் வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் முறை மூலமாக பெறலாம்.

உங்களின் ஆதார் கார்டை திரும்ப பெறுவதற்கான வழிமுறைகள்:

1. இதற்கு முதலில்  https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid என்ற அதிகாரப்பூர்வ இணையப் பக்கத்திற்கு (UIDAI) செல்ல வேண்டும்.

2. இப்போது உங்களின் பெயர், மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரியை உள்ளிட வேண்டும்.

3. அடுத்ததாக Captcha குறியீட்டை சரியாக உள்ளிட வேண்டும்.

TNPSC உதவி இயக்குநர் தேர்வு நுழைவுச்சீட்டு 2022 – வெளியீடு!

4. இதையடுத்து ‘Send OTP’ என்பதை கிளிக் செய்தவுடன் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

5. இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டு Verify OTP என்ற பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

6. உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு Aadhaar number/enrolment ID வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி திரையில் தோன்றும்.

7. இப்போது இ-ஆதார் பக்கத்திற்கு சென்று உங்களின் 12 இலக்க ஆதார் எண் அல்லது 28 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிட வேண்டும்.

8. அதன்பின்பு Security Code-ஐ உள்ளிட வேண்டும். இதையடுத்து ‘Send OTP’ என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

9. இப்போது நீங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP எண் அனுப்பப்படும்.

10. இப்போது இந்த OTP எண்ணை உள்ளிட்டு ’verify and download’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இறுதியாக உங்களின் இ-ஆதார் பதிவிறக்கம் செய்ய தொடங்கும். ஆனால் இந்த இ-ஆதார் ஆனது PDF வடிவில் தான் சேமிக்கப்படும்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!