TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

0
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!
TNPSC தேர்விற்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையங்களிலும் அரசுப் பணியாளர் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனை பற்றிய முக்கிய தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலவச பயிற்சி வகுப்புகள்:

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருந்த அரசுப் பணியாளர் தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அதிக அளவிலானவர்கள் தேர்வில் கலந்து கொள்ள ஆர்வத்துடன் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மையங்களிலும் செயல்படும் தொழில்நெறி வழிகாட்டி மையங்களிலும் அரசுப் பணியாளர் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் இலவசமாக முறையான திட்டமிடல் மற்றும் மாதிரி தேர்வுகளுடன் நடத்தப்படுகின்றது.

தமிழக அரசு ஆசிரியர்கள் கவனத்திற்கு – இடமாறுதல் கவுன்சிலிங் விண்ணப்ப பதிவு விரைவில்!

சேலம் மாவட்டத்தில் அரசு ஏற்பாடு செய்துள்ள பயிற்சி வகுப்புகள் குறித்து சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மைய துணை இயக்குனர் மணி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதில் சேலம் மையத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுவரை 180 பேர் பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளனர். இவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது TNPSC தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் புதிதாக பயிற்சி வகுப்பில் திங்கள், புதன், வெள்ளி கிழமைகளில் காலை 10 மணி முதல் மதியம் 1:30 மணி வரை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) உயர்வு – முதல்வர் சூப்பர் அறிவிப்பு!

தேர்வுக்கான பாடத்திட்டங்கள் அனைத்தையும் தேர்வர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தினமும் நடப்பு நிகழ்வுகள் குறித்த பதிவு தேர்வர்களுக்கு அளிக்கப்படுகிறது. தேர்வர்களுக்கு வினா, விடைகள் தொகுப்பு அளிக்கப்பட்டு தினமும் அரைமணி நேரம் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வர்களுக்கு தொடர்ந்து தேர்வு குறித்த தகவல்கள் தொடர்ந்து அளிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. முற்றிலும் இலவசமாக அனைத்து தரப்பினருக்கும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் எஸ்எஸ்சி தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!