தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பணியிட மாறுதல் கலந்தாய்வு!

0
தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - பணியிட மாறுதல் கலந்தாய்வு!
தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - பணியிட மாறுதல் கலந்தாய்வு!
தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பணியிட மாறுதல் கலந்தாய்வு!

தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கலந்தாய்வு:

தமிழக பள்ளி கல்வித்துறை வருவாய் மாவட்டம், கல்வி மாவட்டம், வட்டார பகுதி என 3 பிரிவுகளாக இயங்கி வருகின்றன. அதன்படி நிர்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன் தலைமை அதிகாரியாக மாவட்ட கல்வி அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். தற்போது அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அவர்களின் சுயவிருப்பத்தின் பேரில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் ஆலோசனை!

அதனை தொடர்ந்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் தற்போது பணி மூப்பு அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழக தனித்தேர்வர்களுக்கான 8 ம் வகுப்பு பொதுத்தேர்வு – கால அட்டவணை வெளியீடு!

அதில், தமிழ்நாடு பள்ளிகல்வித்துறை வகுப்பு 4 இன் கீழ் உள்ள மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி அன்று பிற்பகல் ஐந்து மணி அளவில் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் நாளில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த அனைத்து பணியிடங்கள் காலி பணியிடமாக கருதப்பட்டு அவர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் பணியேற்றுள்ள பணி மூப்பின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here