20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

0
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு - அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!
20 ஆண்டுகளாக அரியர் வைத்திருப்போருக்கு மீண்டும் தேர்வு – அண்ணா பல்கலை முக்கிய அறிவிப்பு!

பொறியியல் படிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் சுமார் 20 ஆண்டுகாலமாக அரியர் வைத்துள்ள மாணவர்கள் தற்போது தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்குரிய ஒரு அரிய வாய்ப்பை வழங்கி அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அரியர் தேர்வு

பொதுவாக பொறியியல் படிப்புகள் சற்று கடினமாதலால், அந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது என்பது பலருக்கும் முடியாத விஷயம் ஆகும். அதிலும் கடந்த 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்னதாக பொறியியல் படிப்புகளுக்கு மாணவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தனர். ஆனால் இந்த படிப்புகளை நிறைவாக முடித்துள்ள மாணவர்களோ சிலர் மட்டுமே. அந்த வகையில் பொறியியல் தேர்வுகளில் கடந்த 20 ஆண்டுகளாக தேர்ச்சி பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அக்.24 தேசிய திறனாய்வு தேர்வு!

அதாவது 2001-2002 கல்வியாண்டு முதல், குறிப்பாக 3 வது செமஸ்டர் தேர்வுகளில் இருந்து தேர்ச்சி பெறாமல் சுமார் 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களில் நடத்தப்பட இருக்கும் செமஸ்டர் தேர்வுகளில் கலந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது. அந்த வகையில் அரியர் தேர்வுகளை எழுத விரும்பும் மாணவர்கள் இன்று (செப்டம்பர் 24) முதல் https://coe1.annauniv.edu/home/ என்ற அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு DA கிராஜூட்டியுடன் ரொக்கப்பணம் – அரசு உத்தரவு!

மேலும் இத்தேர்வுகளுக்கு வழக்கமான தேர்வுக் கட்டணத்துடன் ரூ.5,000 அதிகமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இதனுடன் தேர்வு நடைபெறும் கால அட்டவணை, தேர்வு முறை, தேர்வு மையம் குறித்த முக்கிய அறிவிப்புகள் வரும் அக்டோபர் மாதத்தில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை 044-22357267, 044-22357303, 044-22357272 மற்றும் 044-22357307 என்ற எண் மூலம் தொடர்புகொள்ளும் படி தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக விண்ணப்பங்களை செலுத்துவதற்கான கடைசி தேதி அக்டோபர் 4 வரை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!