சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு – டிச.31ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!

0
சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு - டிச.31ம் தேதிக்குள் 'இது' கட்டாயம்!
சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு - டிச.31ம் தேதிக்குள் 'இது' கட்டாயம்!
சம்பள கணக்கில் PF வைத்திருப்போர் கவனத்திற்கு – டிச.31ம் தேதிக்குள் ‘இது’ கட்டாயம்!

தற்போது மாத சம்பளம் பெறும் தொழிலாளர்கள் தங்கள் சம்பள கணக்கில் PF சேமிக்கும் நபர்கள் கட்டாயமான முறையில் நாமினேஷன் தகவல்களை இணைத்து இருக்க வேண்டும் என்று அரசு அறிவித்து இருந்தது. இதற்கான கால அவகாசம் பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

PF வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

இந்தியாவில் ஏராளமான மாத சம்பளம் வாங்குபவர் மற்றும் தொழிலாளர்கள் தனக்கான சம்பளத்தில் ஒரு பகுதியை வைப்பு நிதி மற்றும் ஓய்வூதிய திட்டத்திற்காக தொழிலாளர் வைப்பு நிதியை கொண்டுள்ளார்கள். இவ்வாறு சேமிக்கப்படும் நிதியானது அவர்கள் பணி ஓய்வு பெற்ற பிறகு மொத்தமாகவோ அல்லது மாதந்தோறும் வழங்கும் பென்ஷன் போலவும் வழங்கப்படுகிறது. சில நேரங்களில் பணியில் இருக்கும் போது மரணம் ஏற்பட்டால் இந்த நிதி யாருக்கு கொடுக்கபட வேண்டும் என்று குறிப்பிடப்படவில்லை. இதனால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

தமிழக அங்கன்வாடியில் ரூ.60,000 ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க டிச.24 கடைசி நாள்!

அதனால் இந்த PF நிதி யாருக்கு வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. அதாவது தங்கள் PF கணக்கில் நாமினி நியமிக்கப்பட வேண்டும். இவ்வாறு நியமிப்பதன் மூலமாக தொழிலாளர் இறந்து போனால் PF கணக்கில் இருந்து பெறக்கூடிய இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் போன்ற அனைத்து நன்மைகளையும் பெற முடியும். இதனை இணைப்பதற்கு ஆதார் இணைக்கப்பட்ட UAN, ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண் மற்றும் நாமினியின் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், ஆதார் எண், வங்கி கணக்கு எண், IFSC கொடு மற்றும் முகவரி போன்ற தகவல்களை வைத்திருக்க வேண்டும்.

தங்கள் நாமினியை இணைப்பதற்கு epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்திற்கு செல்ல வேண்டும். அதன் பின் ‘சேவை’ என்பதை தேர்ந்தெடுத்து ‘For Employees’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதற்கு அடுத்ததாக உறுப்பினருக்கான UAN/ ஆன்லைன் சேவை (OCS/OTP) என்பதை கிளிக் செய்து UAN எண் மற்றும் கடவுச்சொல்லை உள்ளீடாக கொடுத்து லாகின் செய்ய வேண்டும். இப்பொழுது Manage Tab-க்கு கீழ் உள்ள ‘இ-நாமினேஷன்’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில் Provide Details என்று திரையில் காண்பிக்கப்படும். அதில் Save என்பதை கிளிக் செய்ய வேண்டும். மேலும் குடும்ப அறிவிப்பைப் புதுப்பிக்க விருப்பினால் Option-ல் Yes என்பதை கிளிக் செய்து குடும்ப விவரங்களை சேர் செய் என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அரசு பள்ளிகளுக்கு 2022ம் ஆண்டில் 113 நாட்கள் விடுமுறை – கல்வி காலண்டர் வெளியீடு!

அதன் பின் அதில் கேட்கப்பட்டுள்ள தகவலை நிரப்ப வேண்டும். தற்போது நாமினேஷன் விவரங்கள் உள்ளிடுவதற்கு ‘Nomination Details’ என்பதை தேர்வு செய்து தகவல்களை நிரப்பிய பிறகு ‘Save EPF Nomination’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதன் மூலமாக நாமினேஷன் சேர்க்கப்பட்டதை உறுதி செய்ய முடியும். இவ்வாறு நாமினியை வருகிற 31-ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். நாமினியை இணைக்கவில்லை என்றால் PF கணக்கில் இருந்து பெறப்படும் பென்ஷன் மற்றும் இன்சூரன்ஸ் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்பட மாட்டாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!