அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க மே 25 கடைசி நாள்!

0
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க மே 25 கடைசி நாள்!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு - ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க மே 25 கடைசி நாள்!
அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆயுள் சான்றிதழ் சமர்ப்பிக்க மே 25 கடைசி நாள்!

இந்தியாவில் பாதுகாப்புத் துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் அது சரியாக கிடைப்பதை உறுதி செய்ய ஆயுள் சான்றை வரும் 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி பாதுகாப்புத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஆயுள் சான்று:

இந்தியாவில் பணியில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு பணி காலத்திற்கு பிறகு உதவும் வகையில் அரசு சார்பாக மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓய்வூதியம் பெறும் நபர்கள் ஆண்டுதோறும் தங்களது ஆயுள் சான்றிதழை ஓய்வூதிய நல அமைச்சகத்தில் சமர்ப்பிப்பது அவசியம். இதன் மூலம் ஓய்வூதியம் பெறும் நபர் உயிரோடு இருப்பது உறுதி செய்யப்படுகிறது. ஓய்வூதிய சான்றிதழ் சமர்பிக்காவிட்டால் அவர்களின் ஓய்வூதியத்தொகை நிறுத்தப்பட்டு விடும். ஓய்வூதியம் பெறும் நபர்கள் வயதானவர்கள் என்பதால் அவர்களால் நேரடியாக அலுவலகத்திற்கு வந்து சமர்ப்பிப்பதில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டனர்.

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடி உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

கொரோனா தொற்று காலத்தில் வீட்டை விட்டு வெளியேற அச்சப்பட்டனர். இந்த நிலையில் ஓய்வூதியதாரர்களுக்கு உதவும் வகையில் டிஜிட்டல் முறையில் ஆயுள் சான்று சமர்ப்பிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. எனவே வங்கிகள், அஞ்சல் துறை மூலமாகவும் ஆயுள் சான்றை சமர்ப்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டது. தற்போது பாதுகாப்புத் துறையில் கீழ் ஓய்வூதியம் பெறுபவா்கள் தங்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் சரியாக கிடைப்பதை உறுதி செய்ய ஆயுள் சான்றை 2022 மே 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் படி அத்துறைக்கான அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது ஓய்வூதியத் தொகை பெறுவது குறித்து மே 17ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை ஆய்வு செய்ததில் 43,774 பேர் தங்களின் விவரங்களை சரியாக தாக்கல் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரா்கள் தங்களின் வருடாந்திர அடையாளச் சான்றை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களின் ஆவணங்களை மே 25ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here