அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மே 31 வரை கார்டுகள் சமர்ப்பிப்பு!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மே 31 வரை கார்டுகள் சமர்ப்பிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு - மே 31 வரை கார்டுகள் சமர்ப்பிப்பு!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மே 31 வரை கார்டுகள் சமர்ப்பிப்பு!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தகுதியற்ற ரேஷன் அட்டைதாரர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் தங்களது கார்டுகளை மாவட்ட உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் ஜூன் 1 முதல் அவை ரத்து செய்யப்பட இருக்கிறது.

ரேஷன் கார்டுகள்

கொரோனா பேரலைத்தொற்று காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட உணவுப்பொருட்கள் தகுதியில்லாதவர்களை சென்று அடைந்ததாக புகார்கள் எழுந்தது. இதை கவனத்தில் கொண்ட மத்திய அரசாங்கம் மே மாதம் 31ம் தேதிக்குள், தகுதியில்லாதவர்கள் தங்களது ரேஷன் கார்டுகளை மண்டல உணவு வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட உணவு வழங்கல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது. இல்லையெனில் ஜூன் 1ம் தேதி முதல் தகுதியற்ற குடும்பங்களின் ரேஷன் கார்டுகள் தள்ளுபடி செய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 2, 2A தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு – ஆன்சர் கீ டவுன்லோட் செய்வது எப்படி? முழு விவரம்!

அந்த வகையில் நாடு முழுவதும் உள்ள தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டை ஒப்படைக்க இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே மீதம் உள்ளன. இதனால் வரும் திங்கள்கிழமை விடுமுறை நாட்களில் கூட ரேஷன் கார்டுகளை ஒப்படைக்க உணவு வழங்கல் துறை அலுவலகங்கள் திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தகுதியற்றோரிடம் இருந்து இதுவரை ஐந்தாயிரம் ரேஷன் கார்டுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, அடுத்து வரும் இரண்டு நாட்களுக்குப் பிறகு, தகுதியற்றவர்களின் ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு துறை சார்பில் சரிபார்ப்பு பிரச்சாரம் நடத்தி எப்ஐஆர் பதிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exams Daily Mobile App Download

இது குறித்த உத்தரவின்பேரில், தகுதியில்லாதவர்களிடம் இருந்து ரேஷன் கார்டை ஒப்படைக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது என்றும் இந்த பிரசாரத்தின் போது, தகுதியில்லாதவர்கள் கார்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மே, 31ம் தேதிக்குள் கார்டுகளை ஒப்படைக்காதவர்கள் மீது அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது விடுமுறை நாட்களிலும் ரேஷன் கார்டுகளை சமர்ப்பிக்கும் வகையில், ஹரித்வார் தாலுகாவில் அமைந்துள்ள பக்வான்பூர், ரூர்க்கி, லக்சர் உள்ளிட்ட மாவட்டத் தலைமையகம் திறந்திருக்கும் என்று உத்தரகண்ட் மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here