SBI வங்கி வாடிக்கையாளர்கள் செப்.30க்குள் ‘இதை’ செய்ய வேண்டும் – முக்கிய அறிவிப்பு!

0
SBI வங்கி வாடிக்கையாளர்கள் செப்.30க்குள் 'இதை' செய்ய வேண்டும் - முக்கிய அறிவிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் செப்.30க்குள் 'இதை' செய்ய வேண்டும் - முக்கிய அறிவிப்பு!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் செப்.30க்குள் ‘இதை’ செய்ய வேண்டும் – முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆதாருடன், பான் கார்டை இணைக்க செப்டம்பர் 30 கடைசி நாள் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்பிஐ வங்கி அறிவிப்பு:

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா தனது 44 கோடிக்கும் மேலான வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் அறிவிப்பு படி பான் கார்டு மற்றும் ஆதார் கார்டுகளை இணைப்பது அவசியம் என தெரிவித்துள்ளது. அதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 ஆம் தேதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்படா விட்டால் அந்த பான் கார்டு செல்லாது என எச்சரித்துள்ளது.

செப்டம்பர் 6ம் தேதி வரை பள்ளிகளை திறக்க தடை – 40 குழந்தைகள் உயிரிழப்பு எதிரொலி!

வாடிக்கையாளர்கள் எளிமையான முறையில் வருமான வரித்துறை இணைய பக்கம் மூலமாக ஆதார் அட்டையை பான் கார்டுடன் இணைக்கலாம். அல்லது SMS மூலமாகவும் இணைக்கலாம். அதற்கு உங்களது மொபைல் எண்ணில் இருந்து UIDPAN (space) 12 digit Aadhar (space) 10 digit PAN என டைப் செய்து 567678 என்ற அல்லது 56161 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். உதாரணமாக உங்களது ஆதார் எண் 111122223333 எனவும், PAN எண் AAAPA9999Q என இருந்தால் நீங்கள் UIDPAN 111122223333 AAAPA9999Q என டைப் செய்து அனுப்ப வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

பான் கார்டு இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு நபர் 50,000 ரூபாய் வரை மட்டுமே தனது கணக்கில் பணம் போட முடியும் என்றும், வருமான வரி ஏய்ப்பு செய்பவர்கள் இதன் மூலம் கண்டறியப்படுவார்கள் என்பதும் உறுதியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் சட்டமான சட்ட பிரிவு 139 AA இன் பிரிவு 41 யும் மேற்கோள் காட்டியுள்ளது. இதனால், இதுவரை வங்கி கணக்குடன் தங்கள் ஆதார் மற்றும் பான் கார்டை இணைக்காதவர்கள் விரைந்து இதனை முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!