TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

0
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே!
TNUSRB உதவி ஆய்வாளர் (SI) 444 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்கள் மட்டுமே!

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் காவல் உதவி ஆய்வாளர் பணியிடத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SI தேர்வு:

தமிழக காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித்தேர்வு என்று இரண்டு கட்டங்கள் உள்ளது. இரண்டு கட்டங்களில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடித்தவுடன் பணி நியமனம் செய்யப்படுகிறது. இதில் TNUSRB PC தேர்வு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு அடுத்த கட்ட உடல் தகுதி தேர்வு நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது.

Post Office சேமிப்பு திட்டங்களில் கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகித விபரங்கள்!

அதன் பிறகு மாநிலம் இயல்பு நிலைக்கு திரும்பிய உடன் உடல் தகுதி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த படியாக காவல் உதவி ஆய்வாளர் (SI) பணிக்கான தேர்வு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இத்தேர்வானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. 4 வருடங்களுக்கு பிறகு நடப்பாண்டு 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. எழுத்துத் தேர்வு இரண்டு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதி தமிழ் மொழித் தகுதித்தேர்வாகும்.

இதில் 100 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். இதில் குறைந்தபட்சம் 40 மதிப்பெண்கள் அவசியமாகும். விண்ணப்பிக்க விரும்புவோர் 20 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும் வேண்டும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த மார்ச் 8 ஆம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவுகள் தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏப்ரல் 7 கடைசி தேதியாகும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே மீதம் உள்ள நிலையில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!