TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

0
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதன் அடிப்படையில் பலர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் குரூப் 4 தோ்வுக்குத் தகுதியான முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிக்கை வெளியியுள்ளார்.

முக்கிய தகவல்:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஒரு ஆண்டுக்கு குறைந்தது 35 தேர்வுகளை டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இவை தவிர பதவி உயர்வுகளுக்கான துறைசார் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. நடத்துகிறது. இருப்பினும் கடந்த வருடங்களில் அமலில் இருந்த பொது முடக்கம் காரணமாக TNPSC போட்டி தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது நோய் தாக்கம் கட்டுக்குள் வந்து உள்ளதால் தொடர்ந்து போட்டித் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் அண்மையில், டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ உள்ளிட்ட அரசு பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி மார்ச் 23ம் தேதியுடன் நிறைவடைந்தது.

Post Office சேமிப்பு கணக்கு வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அப்டேட் – இதை செய்தால் மட்டுமே வட்டி கிடைக்கும்!

இதை அடுத்து குரூப் 4 மற்றும் வி.ஏ.ஓ உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்தார். இதனால், குரூப் 4 தேர்வுக்கு மார்ச் 30 முதல் ஏப்ரல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் திருப்பூா் மாவட்டத்தில் குரூப் 4 தோ்வுக்குத் தகுதியான முன்னாள் படை வீரா்களுக்கு நேற்று முக்கிய செய்தி குறிப்பை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட செய்தி குறிப்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலமாக குரூப் 4 இல் இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட 7,301 பணியிடங்களுக்கு தோ்வு நடைபெறவுள்ளது. இந்த பணியிடங்களில் 5 சதவீதம் முன்னாள் படை வீரா்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வயது வரம்பில் பொதுப் பிரிவினருக்கு 48 ஆகவும், ஏனைய பிரிவினருக்கு 53 ஆகவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தத் தோ்வில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள முன்னாள் படை வீரா்கள் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம். ஜூலை 24ம் தேதி குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. மேலும், இத்தோ்வுக்குப் முன்பயிற்சி பெற விருப்பம் உள்ள முன்னாள் படை வீரா்கள், திருப்பூா் மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பத்தினை சமா்ப்பிக்கலாம் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!