TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30!

0
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30!
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் அரசு வேலை - விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30!
TNPSC ரூ.2,05,700 சம்பளத்தில் அரசு வேலை – விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 30!

தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தின் காரணமாக TNPSC எந்த தேர்வுகளையும் நடத்த வில்லை. இருப்பினும் தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், இந்த ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே போட்டித் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது. இந்த வகையில் TNPSC புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.04.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சமூக பாதுகாப்புத் துறையில் காலியாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு அடிப்படையில் மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பணியில் காலியிடங்களின் எண்ணிக்கை 16 ஆகும். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree in Sociology or Social Work or Psychology or Child Development or Criminology படிப்பு முடித்திருக்க வேண்டும்.மேலும் விண்ணப்பதாரர் 01.07.2022 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST, MBC(V), MBC DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

PNB வங்கியில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிப்பதற்கான முழு விபரங்கள் இதோ!

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாத சம்பளம் ரூ.56,100 – 2,05,700 வழங்கப்படும். இந்த வகையில் எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம் ஆகும். மேலும் 2ம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

ExamsDaily Mobile App Download

எழுத்து தேர்வு 19.06.2022 அன்று நடைபெறும். மேலும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கபடுவர். இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணம் ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. இதையடுத்து தேர்வுக் கட்டணம் ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC – DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு. பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள்  http://www.tnpsc.gov.in அல்லது http://www.tnpscexams.in என்ற  இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே நிரந்தரப் பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விபரங்கள் அறிய அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!