தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - மே 30 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - மே 30 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் அதிகமாக வேலைவாய்ப்பின்மை நிலவி வந்தது. அதை போக்கும் விதமாக தமிழக அரசு அனைத்து துறைகளில் இருந்தும் வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.05.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்கள் வரவேற்பு:

தமிழகத்தில் ஜனவரி மாத இறுதியில் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அதனால் பிப்ரவரி மாத தொடக்கத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்புகள், போட்டித்தேர்வுகள் அறிவிப்புகள் வரத் தொடங்கி உள்ளன. அந்த வகையில் தற்போது தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், சிவகங்கை மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கல்வி விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர தூய்மை பணியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – விரைவில் வெளியாகும் ஹாப்பி நியூஸ்!

பகுதி நேர தூய்மைப் பணியாளர் (Cleaning Staff) பணியில் காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 50 ஆகும். சிவகங்கை மாவட்டத்தில் (ஆண் – 22, பெண் – 14) 36 பணியிடங்கள், நாகப்பட்டினம் மாவட்டத்தில் (ஆண் – 6, பெண் -8) 14 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க , விண்ணப்பதாரருக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கான தொகுப்பூதியம் ரூ. 3,000 ஆகும். மேலும் 01.07.2022 அன்று விண்ணப்பதாரர் 18 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இருப்பினும் BC/MBC/DNC பிரிவினர் 32 வயது வரையிலும், SC/ST பிரிவினர் 35 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

Exams Daily Mobile App Download

நேர்முகத் தேர்வு அடிப்படையில் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2022/05/2022051044.pdf அல்லது https://cdn.s3waas.gov.in/s3c203d8a151612acf12457e4d67635a95/uploads/2022/05/2022051059.pdf என்ற  இணையதளப்பக்கங்களில் அறிவிப்புக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும், பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் சிவகங்கை, நாகப்பட்டினம் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

சிவகங்கை: மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சிவகங்கை நாகப்பட்டினம் : மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், அறை எண் – 222, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here