தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

0
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை - ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
தமிழக தனியார் பள்ளிகளில் RTE மாணவர் சேர்க்கை – ஏப்ரல் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு ஏப்ரல் 20ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

RTE:

இந்தியாவில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தாழ்த்தப்பட்ட, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அரசு 25 % இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கல்வி அளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 6 முதல் 14 வயதிலான குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெற விரும்பும் குழந்தைகளின் பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இவர்கள் தேர்தெடுக்கும் பள்ளி 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகள் உள்ளது.

வங்கியில் வீட்டுக்கடன் வாங்கியவர்கள் கவனத்திற்கு – இப்படி EMI கட்டினால் பணம் மிச்சம்!

ஆண்டுதோறும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கைக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் அறிவிப்பு வெளியாகி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனியார் பள்ளிகளில் கற்கும் மாணவர்களின் கல்வி செலவு முழுவதும் அரசே ஏற்கிறது. தற்போது 2022-2023 ம் கல்வியாண்டிற்கான கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை 20ஆம் தேதி ஆன்லைன் மூலம் தொடங்க உள்ளது. மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.rtetnschools.gov.in என்ற இணையதளத்தில் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரிக்குலேஷன் பள்ளி இயக்குனர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மாணவர்களின் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட உரிய ஆவணங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு இருப்பின் மே 23ஆம் தேதியன்று குலுக்கல் நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். அவ்வாறு தேர்வு செய்யப்படும் குழந்தைகளின் பெயர் பட்டியல் மே 24 ஆம் தேதி அன்று வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை மே 29ஆம் தேதிக்குள் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!