பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு – இன்றே கடைசி நாள்!

0
பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு - இன்றே கடைசி நாள்!
பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு - இன்றே கடைசி நாள்!
பத்ம விருதுகள் 2022 விண்ணப்பங்கள் வரவேற்பு – இன்றே கடைசி நாள்!

2022ம் ஆண்டு குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் வழங்க ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்க செப்டம்பர் 15ம் தேதி கடைசி நாளாகும்.

பத்ம விருதுகள்:

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் வழங்கப்படும். பொதுவாழ்வு, கலை, சமூக சேவை, கல்வி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது பத்ம விருதுகளை ‘மக்கள் பத்ம விருதுகளாக’ மாற்ற அரசு உறுதி பூண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் ஒரே நாளில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று – 284 பேர் உயிரிழப்பு!

பெண்கள், சமூகத்தில் பின்தங்கியவர்கள், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சமூகத்திற்கு தன்னலமற்ற சேவையை செய்கிறவர்களிடம் இருந்து அங்கீகரிக்கப்பட வேண்டிய திறமையான நபர்களை அடையாளம் காணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த துறையில் தனித்துவமான மற்றும் விதிவிலக்கான சாதனைகள் மற்றும் சேவையை குறித்து விவரங்களை கொண்டு பத்ம விருதுகளை இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முறைப்படி வெளிப்படுத்த வேண்டும்.

செப்.30 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – கொரோனா 3ம் அலை எதிரொலி!

2022 ஆம் ஆண்டு குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் வழங்க ஆன்லைன் மூலம் பெயர்களை பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது குறித்த விவரங்கள் உள்துறை அமைச்சகத்தின் இணையதளமான www.mha.gov.in-ல் விருதுகள் மற்றும் பதக்கங்கள் எனும் தலைப்பில் வழங்கப்பட்டுள்ளது. விதிமுறைகள் குறித்த விவரங்களை https://padmaawards.gov.in/AboutAwards.aspx எனும் இணைய முகவரியிலும், மேலும் விவரங்களுக்கு 011-23092421, +91 9971376539, +91 9968276366, +91 9711662129, +91 7827785786 என்ற தொலைபேசி எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். செப்டம்பர் 15ம் தேதிக்கு பின்வரும் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!