அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்!

0
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்!
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு - விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்!
அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க வேண்டிய வேலைகளின் பட்டியல்!

நாடு முழுவதும் கொரோனா வருகையால், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வேலைவாய்ப்பு அறிவிப்புகள் தற்போது இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்தே வெளியாகி வருகிறது. அந்த வகையில் வெளியிடப்பட்ட பல பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த வாரத்துடன் முடிவடைகிறது. எனவே விண்ணப்பத்திற்கான கடைசி தேதி எப்போது என்பது உள்ளிட்ட தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

முழு விவரம்:

தமிழ்நாடு அரசு, மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் வெளியிட்ட பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெரும்பாலான பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இந்த வாரத்துடன் முடிவடைகிறது.

CUET (UG) – 2022: மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு

மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான (CUET) விண்ணப்ப செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான விண்ணப்பங்களை, தேசிய தேர்வு முகமையின் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் கடைசி தேதி 06.05.2022 ஆகும்.

Exams Daily Mobile App Download

பஞ்சாப் நேஷனல் வங்கி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சிறப்பு அதிகாரி (Specialist Officers) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது. இந்த அறிவிப்பின்படி, மொத்தம் 145 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் (https://www.pnbindia.in/) விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 07.05.2022 ஆகும்.

புலனாய்வு அதிகாரி:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் புலனாய்வுப் பணியகத்தில் உதவி புலனாய்வு அதிகாரிகளுக்கான தொழில்நுட்பம் சார்ந்த (Assistant Central Inteligent officer- Grade II/Technical) காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பு படி, 150 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.05.2022 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

BIS நிறுவன வேலைவாய்ப்பு:

இந்திய தரநிலைகள் பணியகம் (Bureau of Indian Standards – BIS) நிறுவனத்தில், காலியாக உள்ள பல்வேறு வகையான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 276 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 09.05.2022 ஆகும்.

உதவி கமாண்டன்ட்:

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ – திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள 253 உதவி கமாண்டன்ட் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 10.05.2022 ஆகும்.

பேங்க் ஆஃப் இந்தியா:

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் இந்தியாவில் மொத்தம் 696 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களில் 594 பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாகவும், 102 பணியிடங்கள் தற்காலிக பணியிடங்களாகவும் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 10.05.2022 க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஓ.என்.ஜி.சி வேலைவாய்ப்பு:

இந்தியாவின் முதன்மையான எரிசக்தி நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC), நிறுவனத்தில் 3,614 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 15.05.2022 ஆகும்.

UGC-NET தேர்வு:

தேசிய தேர்வு முகமை (NTA) UGC-NET டிசம்பர் 2021 மற்றும் ஜூன் 2022 ஆகிய இரு சுழற்சி தேர்வுகளுக்கான பதிவு செயல்முறையைத் தொடங்கியுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் ugcnet.nta.nic.in அல்லது nta.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை ஏப்ரல் 30 முதல் மே 30 ஆம் தேதி 5 மணிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here