EPFO நிறுவனத்தில் 65 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!

0
EPFO நிறுவனத்தில் 65 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!
EPFO நிறுவனத்தில் 65 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!
EPFO நிறுவனத்தில் 65 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க ஜூன் 30 கடைசி நாள்!

EPFO நிறுவனத்தில் உள்ள 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

EPFO நிறுவனம்:

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) இந்த திட்ட நிறுவனத்தில் காலியாக உள்ள 65 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, B.E , B.Tech படித்தவர்கள் இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும், 65 வயதிற்குட்பட்டவர்கள் அனைவருமே இந்த Programmer பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் முறையின் மூலமாக மட்டுமே தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும், தேர்வாகும் விண்ணப்பதாரருக்கு ரூ.47,600.00-1,51,100.00 வரைக்கும் சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

விருப்பமும் தகுதியும் பெற்ற விண்ணப்பதாரர்கள் https://www.epfindia.gov.in/site_en/index.php என்கிற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து Sh. Suraj Sharma, Regional Provident Fund Commissioner-I (HRM), Bhavishya Nidhi Bhawan, 14 Bhikaiji Cama Place, New Delhi 110066 என்கிற முகவரிக்கு தபால் அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு புது டெல்லியில் பணியிடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

தற்போது எப்படி EPFO பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதை பார்க்கலாம். முதலில் EPFO ன் அதிகாரபூர்வமான இணையதள முகவரிக்கு சென்று Miscellaneous என்கிற பகுதியை க்ளிக் செய்து Recruitments என்கிற பக்கத்தையும் க்ளிக் செய்யவும். பின்பு, அதன் கீழ் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை தவறில்லாமல் பூர்த்தி செய்யவும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களோடு தபால் அனுப்ப வேண்டும். மேலும், EPFO ன் பணியிடம் குறித்தான விவரங்களை அறிய விரும்பினால்
https://www.epfindia.gov.in/site_docs/PDFs/Recruitments_PDFs/HRM10_DepuVac_Prog_8016.pdf என்கிற பக்கத்திற்கு சென்று தெரிந்துகொள்ளலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூன் 30 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!