தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

0
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - மே 30 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு - மே 30 கடைசி நாள்!
தமிழில் எழுத, படிக்க தெரிந்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு – மே 30 கடைசி நாள்!

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை (DBCWO) சார்பில் பகுதிநேர சுகாதாரப் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாவட்டந்தோறும் இந்த துறையின் கீழ் உள்ள விடுதிகளில் காலியாக உள்ள சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு திறமையும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பத்தை மே 30 ஆம் தேதிக்குள்ளாக தொடர்புடைய அலுவலக முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு அறிவிப்பு:

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கையை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அண்மையில் வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, தமிழகமெங்கும் காலியாக உள்ள 175 பகுதி நேர சுகாதாரப் பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் வயது வரம்பு 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழில் எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இதில் நியமிக்கப்படும் பகுதி நேர சுகாதாரப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஊதியம் வழங்கப்படும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1 முதல் 30 வரை கோடை விடுமுறை – அரசு அறிவிப்பு!

மேலும் பணி நியமனம் செய்வதற்கான அறிவிக்கை மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை, DBCWO அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கப் பெறுகிறது. பணி நியமன நடவடிக்கை நேர்காணல் அடிப்படையில் நடைபெறும். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விடுதிகளில் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

மாவட்ட வாரியான காலிப்பணியிட விவரம்: கோயம்புத்தூர் – 13, கிருஷ்ணகிரி – 34, சிவகங்கை – 36, பெரம்பலூர் – 11, நாகப்பட்டினம் – 14, தருமபுரி – 04, திருவள்ளூர் – 18, கடலூர் – 19, அரியலூர் – 11 மற்றும் புதுக்கோட்டை – 15 பணியிடங்கள்.

விண்ணப்பிக்கும் செயல்முறை:

தொடர்புடைய மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  • பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதில் வரும் அறிவிக்கையை பார்த்து, தகுதி விவரங்களை சரிபார்க்கவும்.
  • விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து, அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை நிரப்பவும்.
  • பெயர், வயது, கல்வித் தகுதி போன்ற தகவல்களை கொடுப்பதுடன், அவற்றை மீண்டும் ஒருமுறை சரிபார்க்கவும்.
  • கடைசி தேதி நிறைவடைவதற்கு முன்பாக, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

    TNPSC Online Classes

    To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
    To Join => Whatsapp கிளிக் செய்யவும்
    To Join => Facebookகிளக் செய்யவும்
    To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!