ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இன்றே கடைசி நாள்! தவறினால் அபராதம்!

0
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இன்றே கடைசி நாள்! தவறினால் அபராதம்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு - இன்றே கடைசி நாள்! தவறினால் அபராதம்!
ஆதார், பான் கார்டு வைத்திருப்போருக்கு எச்சரிக்கை அறிவிப்பு – இன்றே கடைசி நாள்! தவறினால் அபராதம்!

ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காத வாடிக்கையாளர்களுக்கு இன்றே கடைசி தேதி என்பதால் விரைவில் இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இணைக்க தவறியவர்களுக்கு நாளை முதல் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டு:

சொத்துகள் வாங்க, நகை வாங்க, கடன் வாங்க, வங்கிக் கணக்கு தொடங்க முதலான அனைத்து செயல்பாடுகளுக்கும் பான் கார்டு அவசியமான ஒன்றாகிவிட்டது. மேலும், அரசின் அத்தனை நலத் திட்டங்களையும் பெற ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க வேண்டும். குறிப்பாக வரி ஏய்ப்பை தடுக்கவும், மோசடிகளில் இருந்து தப்பிக்கொள்ளவும் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது அவசியம். அப்படி ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலற்றதாகிவிடும்.

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை தகவல்கள்!

ஒருவரே ஒன்றிற்கு மேற்பட்ட பான் கார்டை வைத்துக்கொண்டு வருமானத்தை குறைத்து காட்டுவதால் அரசுக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படுகிறது. இதனால் கருப்புப்பணமும் புழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது மட்டுமே ஒரே வழி என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க மத்திய அரசு அவ்வப்போது கால அவகாசம் கொடுத்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்குமாறு நினைவுபடுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

ஏற்கனவே பலமுறை ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மார்ச் 31 ஆம் தேதி வரை இணைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த கால அவகாசம் இன்றுடன் நிறைவடைவதால் விரைவில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க தவறியவர்களுக்கு நாளை முதல் 1000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here