வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு – டிச.31 கடைசி நாள்!

0
வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு - டிச.31 கடைசி நாள்!
வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு - டிச.31 கடைசி நாள்!
வருமானவரி தாக்கல் செய்யாதிருப்போர் கவனத்திற்கு – டிச.31 கடைசி நாள்!

அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஆற்ற வேண்டிய முக்கிய கடமையாக வருமான வரி செலுத்துதல் இருந்து வருகிறது. இத்தகைய வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு வரும் டிச.31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி தாக்கல்:

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா என அனைத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இந்த வருமான வாரியானது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் இந்த நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கான ITR போர்ட்டலில் சில தொழிநுட்ப சிக்கல் நிலவியதால் ஏற்கனவே 2 முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

தமிழகத்தில் நாளை முதல் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? இன்று அறிவிப்புகள் வெளியீடு!

இந்நிலையில் தற்போது டிச.31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளாக இந்திய வருமான வரித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த வருமான வரி தாக்கல் செய்வதற்கான நினைவூட்டல்கள் வருமான வரி செலுத்துவோருக்கு SMS, மின்னஞ்சல்கள், சமூக ஊடகங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதனால் வருமான வரி தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ளதால் அனைவரும் விரைந்து தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் குறித்த விபரங்களை பின்வருமாறு காணலாம்.

படிவம் 16:

இந்த படிவம் 16 என்பது மூலத்திலிருந்து கழிக்கப்பட்ட வரி (TDS) சான்றிதழ் ஆகும். இந்த படிவம் அனைத்து சம்பளதாரர்களுக்கும் ITR தாக்கல் செய்வதற்கான ஒரு முக்கிய ஆவணமாக கருதப்படுகிறது.

இதில் இரண்டு பகுதிகள் உள்ளது. அவை பகுதி A,B ஆகும்.
பகுதி A: இந்த நிதியாண்டில் கழிக்கபட்ட வருமான வரி விபரம் அடங்கியிருக்கும்.
பகுதி B: பணியாளரின் மொத்த சம்பளத்தின் பிரிவு வாரியான சான்றிதழ் அடங்கியிருக்கும்.

வட்டி வருமான சான்றிதழ்:

சம்பளத்தை தவிர்த்து, வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருந்து சேமிப்பு கணக்கு வைப்பு மற்றும் நிலையான வைப்பு (FD) போன்ற பல்வேறு வட்டி தரும் முதலீடுகளிலிருந்து தனிநபர் வருமானம் பெறுகின்றனர். அத்தகைய சேமிப்புக் கணக்கிலிருந்து பெறப்பட்ட வட்டிக்கு வருமான வரிச் சட்டத்தின் 80TTA பிரிவின் கீழ் விலக்கு பெறலாம்.

வரி சேமிப்புக்கான முதலீட்டு சான்றிதழ்:

முந்தைய நிதியாண்டில் தங்களது வரி சேமிப்பு முதலீட்டு சான்றுகளை உரிய துறையில் சமர்ப்பிக்க முடியாத நபர்கள் வரி விலக்கு பெறுவதற்கு வருமான வரித் துறைக்கு நேரடியாக அறிவித்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் அனைத்து விதமான முதலீடுகளும் அடங்கும். அதாவது இதன் மூலம் 80C மற்றும் 80Dன் கீழ் வரி விலக்கு பெற முடியும்.

படிவம் 26A S:

படிவம் 26AS என்பது வருமான வரித் துறையால் உருவாக்கப்பட்ட வருடாந்திர ஒருங்கிணைந்த வரி அறிக்கையாகும். அனைத்து வரி செலுத்துபவர்களும் தங்கள் பான் எண்ணைப் பயன்படுத்தி வருமான வரி இணையதளத்தில் இருந்து இதை எளிதாக பெறலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!