
TN TET தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளோர் கவனத்திற்கு – நேற்றுடன் அவகாசம் நிறைவு! 4.17 லட்சம் பேர் பதிவு!
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் அறிவிக்கப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப தேதி நேற்றுடன் முடிந்த நிலையில் தற்போது நேற்று வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை வெளியாகி உள்ளது.
TN TRB:
தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் கடந்த இரு ஆண்டுகளாக தலைதூக்கி இருந்தது. இந்நிலையில் சென்ற 2021 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழக அரசு பல தளர்வுகளை அறிவித்து இருந்தது. மேலும் பள்ளிகளும் மீண்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு பொதுத் தேர்வுகள் நடைபெறும் என்றும் அதற்கான தேதியும் தெரிவித்து உள்ளது அரசு. இது மட்டுமல்லாமல் கொரோனா தொற்று இருந்த காரணத்தால் கடந்த இரு ஆண்டுகளாக அரசு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வராமல் இருந்த நிலையில் தற்போது சமீபத்தில் tnpsc குரூப் 2 தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவந்தது. இதனை தொடர்ந்து அடுத்தாக குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்புகளும் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் ஆர்வமுடன் தேர்வுகளுக்கு படித்து வருகின்றனர்.
தமிழகத்தில் நாளை மறுநாள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியா் அறிவிப்பு!
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்குக்கான தேதியை கடந்த 7ஆம் தேதி வெளியிட்டது தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வு வாரியம். இது பிளஸ் 12 மற்றும் பி. எட் படித்து முடித்த மாணவ மாணவிகள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பாக குறைந்தபட்சம் 18 வயது முடிந்து இருக்க வேண்டும். ஆனால் அதிகபட்ச வயது வரம்பு தேவையில்லை. இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக பொதுப்பிரிவினர், எம்பிசி , பி சி பிரிவினருக்கு ரூ 500 என்றும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ 250 என்றும் தெரிவித்து உள்ளனர். இந்த தேர்வுகள் தாள் 1 ஜூன் 27 ஆம் தேதி அன்றும், தாள் 2 ஜூன் 28 ஆம் தேதி அன்றும் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தற்போது நேற்றுடன் இதற்கு விண்ணப்பிக்கும் தேதி முடிந்த நிலையில் நேற்று மாலை 4:30 மணி வரை, 4.17 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். நேற்று நள்ளிரவு 12:00 மணி வரையிலும் விண்ணப்ப பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டது. நள்ளிரவு வரையிலான, விண்ணப்பங்களின் எண்ணிக்கை இன்று தெரியவரும் என்று வாரியத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.