‘முடிந்தது சகாப்தம்’ – கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

0
'முடிந்தது சகாப்தம்' - கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!
'முடிந்தது சகாப்தம்' - கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

‘முடிந்தது சகாப்தம்’ – கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெற்றார் லசித் மலிங்கா!

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

லசித் மலிங்கா:

லசித் மலிங்கா இலங்கை கிரிக்கெட் அணியின் மிகப்பெரிய தூணாக விளங்கி வருகிறார். கடந்த 2004ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அடியெடுத்து வைத்தவர் மலிங்கா. வேகப்பந்து வீச்சில் அபாரமான திறமை கொண்டவராக உலக அரங்கில் வலம் வந்தார். மலிங்காவின் பந்து வீச்சிற்கு ஸ்டம்புகள் கண்டிப்பாக பறந்து விடும்.

அக்.17ம் தேதி புதிய IPL அணிகளுக்கான ஏலம் – பிசிசிஐ அறிக்கை!

வேகப்பந்து வீச்சில் துல்லியமாக தாக்குதல் தொடுக்கும் வல்லமை படைத்தவர் மலிங்கா. 38 வயதான இவர் கிரிக்கெட் போட்டிகளில் பல சாதனைகளை படைத்துள்ளார். இதுவரை 30 டெஸ்ட் போட்டிகள், 226 ஒரு நாள் போட்டிகள், 83 T20 போட்டிகள் மற்றும் 122 IPL போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். அவற்றில் மொத்தமாக 1066 ரன்கள் & 716 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே T20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை சாய்த்த முதல் பவுலர் என்ற பெருமை இவரிடமே உள்ளது.

மேலும் மலிங்கா தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை கபளீகரம் செய்த ஒரே பவுலர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதனை அவர் இரண்டு முறை சாதித்து காட்டியுள்ளார். மேலும் 3 முறை ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த ஒரே பவுலராகவும் திகழ்கிறார். சர்வதேச அரங்கில் மட்டுமில்லாது ஐபிஎல் போட்டிகளிலும் அவரது பங்கு மிகப்பெரியது. மும்பை இந்தியன்ஸ் அணியில் முக்கிய நட்சத்திரமாக இடம் பெற்றிருந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஐபிஎல் பைனலில் கடைசி பந்தில் விக்கெட் எடுத்து கோப்பையை வெல்ல வித்திட்டார்.

IPL Countdown 2021: இந்த முறை ரஸல் ராக்கெட் வெடிக்குமா? மோர்கனின் படை தயார்!!

கடந்த 2011ம் ஆண்டிலேயே டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றவர், தொடர்ந்து ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் மட்டும் பங்கேற்று வந்தார். சமீபத்தில் 2019ம் ஆண்டில் ஒரு நாள் போட்டியில் இருந்தும் ஓய்வு பெற்றவர், தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் (எஞ்சியுள்ள T20 போட்டி) ஓய்வு முடிவை அறிவித்து உள்ளார். ஓய்வு அறிவிப்பில், “இன்று முதல் எனது T20 போட்டி ஷூக்களுக்கு ஓய்வு அளிக்கிறேன் என்றும், தனக்கு வாழ்த்துக்கள் மற்றும் ஊக்கம் அளித்த அனைவர்க்கும் நன்றிகள்” எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!