பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!

0
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!
பிக்பாஸ் சீசன் 5ல் கலந்து கொள்ளும் லட்சுமி ராமகிருஷ்ணன்? அவரே வெளியிட்ட பதிவு!

விஜய் டிவியில் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் சீசன் 5 வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்பட உள்ள நிலையில், போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கான யூகங்களில் லட்சுமி ராமகிருஷ்ணன் பெயரை நீக்க வேண்டும் என அவரே தெரிவித்துளளார்.

பிக் பாஸ் 5:

விஜய் டிவியில் மக்கள் மட்டுமல்லாமல் பிரபலங்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் தொடங்க உள்ளதாக சமீபத்தில் டீஸர் வெளியானது. அதில் உலகநாயகன் கமல் ‘ஆரம்பிக்கலாமா’ என மாஸான லுக்கில் வந்திருந்தார்.அன்று முதல் பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த பட்டியல் தான் முக்கிய டாப்பிக்காக சமூக வலைத்தளங்களில் வலம் வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி குறித்து அறிவிப்பு வெளியான போது இவர் கலந்து கொள்ள உள்ளார் என வதந்திகள் பரவி வருகின்றன.

ஆட்டோ டிரைவராக மாறிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா – ரசிகர்கள் அதிர்ச்சி!

இந்த ஆண்டும் அது போல பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள போட்டியாளர்கள் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் டிக்டாக் பிரபலம் ஜிபி முத்து, துள்ளுவதோ இளமை பட புகழ் அபினய், நடிகை ஷகிலா மகள் மிளா, நடிகை ஐஸ்வர்யா, நடிகை வடிவுக்கரசி, சூசன், மகேந்திரன் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் இது உறுதியான பட்டியல் இல்லை.

வெண்பா பேச்சை கேட்டு பாரதிக்கு விவாகரத்து கொடுக்கும் கண்ணம்மா – அதிரடி திருப்பங்களுடன் ‘பாரதி கண்ணம்மா’!

மேலும் இந்த பட்டியலில் நடிகை மற்றும் இயக்குனரான லட்சுமி ராமகிருஷ்ணன் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து அவர், “என்னுடைய பெயரை பிக்பாஸ் போட்டியாளர்கள் பட்டியலில் பார்த்தேன். நான் 5வது சீசனில் கலந்து கொள்ளவில்லை தயவு செய்து என் பெயரை அந்த பட்டியலில் இருந்து நீக்குங்கள்” என குறிப்பிட்டுள்ளார். அவர் ஏற்கனவே சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!