விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி, ஹேமாவின் ஆட்டம் ஆரம்பம் – காத்திருக்கும் திருப்பங்கள்!

0
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி, ஹேமாவின் ஆட்டம் ஆரம்பம் - காத்திருக்கும் திருப்பங்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி, ஹேமாவின் ஆட்டம் ஆரம்பம் - காத்திருக்கும் திருப்பங்கள்!
விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி, ஹேமாவின் ஆட்டம் ஆரம்பம் – காத்திருக்கும் திருப்பங்கள்!

பாரதி கண்ணம்மா சீரியலில் அப்பாவை அறிந்த லட்சுமி மற்றும் அம்மாவை தெரியாத ஹேமா இருவர் காட்சிகளே தற்போது சீரியலை ஸ்வாரசியங்களோடு எடுத்து செல்கிறது. இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள எபிசொட் மூலம் இந்த வாரம் பல திருப்பங்கள் வர உள்ளது போல் தெரிகிறது. இதை குறித்து இப்பதிவில் விரிவாக பார்க்கலாம்

லட்சுமி மற்றும் ஹேமா:

பாரதி கண்ணம்மா தொடரில் அப்பா யாரென தேடி அலைந்த லட்சுமியின் கேள்விக்கு பதில் கிடைத்ததால் பள்ளிக்கு செல்லாமல் அப்பா இருக்கும் இடத்திற்கு சென்று பேசுவதை முந்தைய எபிசோடில் பார்த்தோம். அதை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில் லட்சுமியை தேடும் கண்ணம்மா வீட்டிற்கு வந்து பார்த்த போது லட்சுமி வீட்டில் இருப்பதை கண்டு கண்ணீர் மல்க அழுது அவளிடம் எங்கு சென்றாய்? என்ற கேள்வியுடன் கட்டி அணைக்கிறாள். அந்த நேரம் பார்த்து கண்ணம்மா வீட்டுக்கு சவுந்தர்யாவும் வர, எல்லா உண்மையும் தெரிந்த லட்சுமி என் மேலே உனக்கு ஏன் பாட்டி இவ்வளவு அக்கறை? என்று சவுந்தர்யாவிடம் கேட்க, அவரோ எப்போதும் போல மழுப்பி விட்டு இவரும் நீ எங்கு போனாய் என்று கேட்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அதற்கு பதிலாக நான் அப்பாவை தேடி சென்றேன் என்று கண்ணம்மாவிடம் கூறினாள். அப்போது லட்சுமியின் பேச்சில் வித்யாசத்தை கண்டனர் கண்ணம்மா மற்றும் சௌந்தர்யா. உடனே லட்சுமி சவுந்தர்யாவிடம் தனது அப்பாவை பற்றி வேண்டுமென்று மோசமாக பேச அதை தாங்க முடியாமல் இருக்கும் சௌந்தர்யா மனதுக்குள் பயம் உண்டாகிறது. எங்கு நாம் உண்மையை உளறி விடுவோமோ என்ற பயத்தில் அங்கிருந்து கிளம்புகிறார். அனைத்தையும் கவனிக்கும் கண்ணம்மாவுக்கு லட்சுமியின் பேச்சு அனைத்தும் புதிதாக தெரிகிறது.

மாதம் ரூ. 50,000க்கு மேல் பென்சன் கிடைக்கும் திட்டம் – முழு விவரம் இதோ !

இந்த பக்கம் பாரதி கண்ணம்மாவின் உண்மையை பற்றியும், உன் அப்பா பாரதி தான் என்று லட்சுமியிடம் சொல்லத் துடிக்கும் அகிலனை மனைவி அஞ்சலி தடுக்கிறாள். இதற்கிடையில் லட்சுமி சிந்திக்க ஆரம்பிக்கிறார். எதற்கு அப்பா என்னை வெறுக்கனும்? எதனால் அம்மாவும் அப்பாவும் இவ்ளோ வருடங்கள் பிரிந்து இருந்தார்கள்? என்று பல கேள்விகளுக்கு பதில் கிடைக்காமல் குழம்பிய நிலையில் ஹேமாவுடன் சேர்ந்து எப்படியாவது இருவரையும் சேர்த்து வைக்க வேண்டும் என முடிவு எடுக்கிறார். இத்துடன் இன்றைய எபிசொட் காட்சிகள் முடிவடைகிறது. இதிலிருந்து வரும் வாரங்களில் லட்சுமி மற்றும் ஹேமாவின் ஆட்டங்களை பார்க்கலாம் என்பது தெரியவருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!