பாரதி, அகிலுடன் இணைந்த லட்சுமி மற்றும் ஹேமா – விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், பாரதி கண்ணம்மா உடன் அவரது வீட்டில் இருப்பதால் குழந்தைகள் சௌந்தர்யா வீட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் குழந்தைகள் பாரதியுடன் சேர்ந்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.
பாரதி கண்ணம்மா:
பாரதி கண்ணம்மா சீரியலில், பாரதி கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் வெண்பா ஜெயிலில் இருப்பதால் அவருக்கு பாரதி கண்ணம்மா சேர்ந்து வாழ்வது தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் பாரதியும் கண்ணம்மாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வார்களா, லக்ஷ்மிக்கு பாரதி தான் தன்னுடைய அப்பா என்ற உண்மை தெரியவருமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். கூடுதல் நகைச்சுவையை அதிகரிக்க வக்கீல் கதாபாத்திரத்தில் வடிவுக்கரசி வந்துள்ளார்.
10 & 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் வேலை – விண்ணப்பிக்க டிச.25 கடைசி!
அதனால் கதை சற்றும் நகைசுவை குறையமால் சென்று கொண்டிருக்கிறது. அடுத்ததாக லட்சுமி ஹேமாவிற்கு இருவரும் சேர்ந்து வாழ்வது தெரிய கூடாது என்பதால் சௌந்தர்யா அவரது வீட்டிற்கு அழைத்து செல்கிறார். அதனால் லட்சுமி கண்ணம்மாவை பிரிந்து வருத்தத்தில் இருக்கிறார். ஹேமாவும் பாரதி நினைப்பில் இருக்கிறார். மறுபக்கம் அகில் அஞ்சலியை கடத்தியது யார் என தெரியாமல் தேடி வருகிறார். இப்படி பரபரப்பாக கதை சென்று கொண்டிருக்கிறது.
திருமணமான ஒரே மாதத்தில் பிரியும் ஷபானா, ஆர்யன் ஜோடி? வைரலாகும் இன்ஸ்டா பதிவு! ரசிகர்கள் குழப்பம்!
இந்நிலையில் பாரதி ஹேமா லட்சுமியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர்களுடன் வேணு மற்றும் அகில் இருக்கின்றனர். பாரதி அவரது வீட்டிற்கு வந்துவிட்டாரா, என கேள்வி எழுந்துள்ளது. இனி வரும் எபிசோடுகளில் அது குறித்த விடை வெளியே வரும். மேலும் அடுத்த வாரம் வெண்பா ஜெயிலில் இருந்து வந்துவிடுவார் அதனால் இனி வரும் எபிசோட்கள் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும்.