விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ நாளை ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

0
விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' நாளை ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடிப்பில் 'லாபம்' நாளை ரிலீஸ் - படக்குழு அறிவிப்பு!
விஜய் சேதுபதி நடிப்பில் ‘லாபம்’ நாளை ரிலீஸ் – படக்குழு அறிவிப்பு!

மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் லாபம். நாளை முதல் திரையரங்கில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

லாபம்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் தவிர்க்க முடியாத நாயகனாகவும் அவதரித்து வருகிறார் விஜய் சேதுபதி அவர்கள். அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அவ்வப்போது மாஸ் ஆன படங்களும் சில நேரங்களில் க/பெ.ரணசிங்கம் போன்ற விழிப்புணர்வு படங்களையும் கொடுத்து வருபவர். சில நாட்களாக முழுவதும் வில்லனாக அவதரித்து வருகிறார் விஜய் சேதுபதி. மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து கமல் அவர்களின் விக்ரம் படத்தில் வில்லனாக களமிறங்குகிறார்.

நயன்தாரா திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலக முடிவு – ரசிகர்கள் அதிர்ச்சி!

வில்லன் கதாபாத்திரத்தில் இருந்து சற்று மாறுபட்ட கதைக்களத்துடன் லாபம் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க வருகிறார் நாயகன் விஜய் சேதுபதி. இயற்கை, ஈ, புறம்போக்கு போன்ற வித்யாசமான கதைகள் மூலம் தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், கலையரசன், சாய் தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தில் டி.இமான் இசையமைக்க படத்தை 7C என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

பூவே பூச்சூடவா சீரியல் ஹீரோ சிவாவின் மூன்றாம் ஆண்டு திருமண நாள் – ரசிகர்கள் வாழ்த்து!

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் படத்தின் டிரைலர் வெளியான நிலையில் மார்ச் மாதம் இயக்குனர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து படம் வெளியாவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் ஏப்ரல் மாதம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. கொரோனா பாதிப்பை தொடர்ந்து திரையரங்குகள் மூடப்பட்டது. தற்போது திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 9ம் தேதி லாபம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!