KYC புதுப்பிப்பு கட்டாயம் – இல்லையெனில் கணக்கு முடக்கப்படும்.. IPPB விளக்கம்!
இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாடிக்கையாளர்கள் பான் கார்டு விவரங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் கணக்கு முடக்கப்படும் என்ற தகவல் பரவலாக பரவி வருகிறது. இது தொடர்பாக வங்கி விளக்கம் அளித்துள்ளது.
KYC புதுப்பிப்பு:
இந்தியாவில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் அதனுடன் ஆதார் மற்றும் பான் விவரங்களை இணைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளும் அரங்கேறி வருகிறது. அதாவது பணம் பறிக்கும் கும்பல் வங்கி ஊழியரை போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் இல்லையெனில் கணக்கு முடக்கப்படும் என கூறி வாடிக்கையாளரின் தனிப்பட்ட தகவல்களை சேகரித்து அதன் வாயிலாக வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து விடுகின்றனர்.
UG TRB தேர்வுக்கு வீட்டில் இருந்தே தயாராகலாம் – முக்கிய தகவல் இதோ!
அதே போல தற்போது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. அதாவது பான் கார்டு மற்றும் KYC விவரங்களை புதுப்பிக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது குறித்து தற்போது இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கி விளக்கம் அளித்துள்ளது. அதாவது வங்கி கணக்கு முடக்கப்படும் என்று வெளியாகும் செய்தி போலியானது. இது போன்ற எந்த தகவலையும் இந்தியா போஸ் வங்கி வெளியிடவில்லை என உறுதி செய்துள்ளது. மேலும் அங்கு வாடிக்கையாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.