KVS 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு ரத்து!

0
KVS 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2021 - நுழைவுத்தேர்வு ரத்து!
KVS 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2021 - நுழைவுத்தேர்வு ரத்து!
KVS 9 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 2021 – நுழைவுத்தேர்வு ரத்து!

இந்தியாவில் தற்போது கொரோனாவின் பரவல் அதிகரித்து வருவதால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9 ஆம் வகுப்பிற்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே போல் அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. நாள் ஒன்றிற்கு மட்டுமே 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தாக்கத்திற்கு பலியாகி வருகின்றனர். பாதிப்பு எண்ணிக்கையும் 4 லட்சத்தை கடந்து வருகின்றது. இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது முடக்கத்தின் அவசியத்தினை உணர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினை அறிவித்து வருகின்றது.

இந்தியாவில் ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா – 3,523 பேர் பலி!!

இந்த பொது முடக்கம் காரணமாக பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தான் அதிகமாக பாதிப்படைந்து வருகின்றனர். இப்படியாக இருக்க, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான சேர்க்கை எப்போதும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். இந்த முறை, கொரோனா பரவலை கருத்தில் கொண்டு இந்த நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

மாணவர்கள் 2021 – 2022ம் கல்வி ஆண்டிற்காக நுழைவுத் தேர்வினை எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று பள்ளி இயக்குனரகம் அறிவித்துள்ளது. அதே போல் இந்த முறை 9 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கை முன்னுரிமை அடிப்படையில் தான் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, 1 ஆம் வகுப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கான சேர்க்கை தேதி நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!