KV பள்ளிகளில் 13,404 காலிப்பணியிடங்கள் – இன்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு!
நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுகான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலிப்பணியிடங்கள்:
இந்தியா முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காலியாக உள்ள Assistant Commissioner, Principal, Vice Principal, PGT, TGT, Librarian, PRT, Finance Officer, Assistant Engineer, Senior & Junior Secretariat Assistant உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 13,404 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கடந்த மாதம் கேந்திரிய வித்யாலயா சங்கதன் அறிவிப்பை வெளியிட்டது. அதனை தொடர்ந்து மேற்கண்ட பணியிடங்களுக்கு டிச.05 ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதன்படி இன்று (டிச.05) ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் தொடங்கியது. முதுநிலை ஆசிரியர் பணிகளுக்கு 40 வயதிற்குட்பட்டவர்களும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு 35 வயதிற்குட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதில் இட ஒதுக்கீடு பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் சலுகை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய தகுதிதியுடைவர்கள் டிச. 26ம் தேதி வரை https://www.kvsangathan.nic.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
Exams Daily Mobile App Download
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள். இதில் எழுத்து தேர்வானது கணினி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விண்ணப்பதாரர்களுக்கு கணினி அறிவு இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.