விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியுடன் குட்டி பாண்டியன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

0
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணியுடன் குட்டி பாண்டியன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தனம் அண்ணியுடன் குட்டி பாண்டியன் - இணையத்தில் வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணியுடன் குட்டி பாண்டியன் – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணி தனம், கண்ணன் மற்றும் குட்டி பாண்டியனுடன் சேர்ந்து வெளியிட்ட படப்பிடிப்பு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தமிழ் சின்னத்திரையில் கூட்டுக்குடும்ப கதைக்களத்திற்கு பெயர் போன ஒரு சீரியல் என்றால் அது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தான். விஜய் டிவியில் கிட்டத்தட்ட 4 வருடங்களாக சுமார் 900 எபிசோடுகளை கடந்து வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்கள் மத்தியில் இருந்து ஏகப்பட்ட வரவேற்புகளை பெற்று வருகிறது. அந்த வகையில் இதுவரை குடும்பத்தில் ஏற்படும் சின்ன சின்ன சண்டைகள், சச்சரவுகள், கஷ்டங்கள் உள்ளிட்ட கதைக்களத்துடன் சென்று கொண்டிருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இப்போது திடீர் திருப்பமாக அண்ணன், தம்பிகள் உறவில் ஒரு விரிசல் ஏற்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதாவது, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிரின் மனைவி முல்லையின் சிகிச்சைக்கு செலவழித்த பணம் அந்த குடும்பத்தில் ஒரு பெரிய பிரளயத்தை உண்டு பண்ண கதிர் வீட்டை விட்டு வெளியேறி விடுகிறார். இப்போது தம்பியின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். இந்த விஷயத்தை கேள்விப்பட்டு மருத்துவமனைக்கு ஓடி வரும் கதிர் அந்த வீட்டிற்கு வர மாட்டேன் என்று உறுதியாக நிற்க அவர் மீது கோபப்படும் தனம், கதிரை அங்கிருந்து கிளம்ப சொல்கிறார்.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியல் நடிகை வீட்டில் நடந்த துயர சம்பவம் – திரைத்துறையினர் இரங்கல்!

இதனால் கதிர், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் இணைவார் என்ற கொஞ்ச நஞ்ச எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அற்றுப்போயிருக்கிறது. இந்த சூழலில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தின் தனம் அண்ணி, கண்ணன் மற்றும் குட்டி பாண்டியனுடன் சேர்ந்து இருக்கும் சில படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. இந்த வீடியோவில் அழுது கொண்டிருக்கும் பாண்டியனை தனம் ஆறுதல் செய்ய, மறுபக்கத்தில் கண்ணன் தனத்திற்கு அருகில் முட்டி போட்டு அமர்ந்திருப்பது போல காட்சிகள் இடம்பெற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!