விஜய் டிவி ‘பாரதிதாசன் காலனி’ சீரியலின் குமரகுரு & ராதா குடும்பம் அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி 'பாரதிதாசன் காலனி' சீரியலின் குமரகுரு & ராதா குடும்பம் அறிமுகம் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி 'பாரதிதாசன் காலனி' சீரியலின் குமரகுரு & ராதா குடும்பம் அறிமுகம் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாரதிதாசன் காலனி’ சீரியலின் குமரகுரு & ராதா குடும்பம் அறிமுகம் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவியில் புத்தம் புதிதாக ஒளிபரப்பாக இருக்கும் ‘பாரதிதாசன் காலனி’ என்ற சீரியலின் கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்து வைக்கும் ப்ரோமோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

பாரதிதாசன் காலனி

தமிழ் சின்னத்திரையில் எண்ணற்ற டிவி சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் விஜய் டிவி, சன், ஜீ தமிழ் போன்ற ஒரு சில முக்கியமான சேனல்களில் வெளியாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மக்கள் மத்தியில் இருந்து வரவேற்புகள் கிடைத்து வருகிறது. இதற்கு காரணம் அந்த சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் கதைக்களம் தான். அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் சுமார் 4 ஆண்டுகளாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீசன் 2 என்ற சூப்பர் ஹிட் சீரியல் இப்போது 476 எபிசோடுகளுடன் முடிவுக்கு வந்திருக்கிறது.

PM Kisan திட்டத்தின் கீழ் ரூ.2000 நிதியுதவி பெறுபவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இப்போது இந்த சீரியலுக்கு பதிலாக விஜய் டிவியில் ‘பாரதிதாசன் காலனி’ என்ற புத்தம் புதிய சீரியல் தினமும் மாலை 6.30 மணியளவில் ஒளிபரப்பாக இருக்கிறது. அந்த வகையில் வரும் ஜூன் 20ம் தேதி முதல் துவங்கும் இந்த புதிய சீரியலுக்கான ப்ரோமோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது. இப்படி இருக்க, பாரதிதாசன் காலனியில் வசிக்கும் குமரகுரு மற்றும் ராதா என்பவர்களின் குடும்பத்தில் உள்ள கதாபாத்திரங்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த குடும்பத்தில் 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இதில் மூத்த பெண் சுசித்ரா கணக்கு பாடத்தில் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பதாக பெருமிதம் அடையும் தாய் ராதா, தனது சிறிய மகள் சரியாக படிப்பதில்லை என்று வருத்தப்பட்டு விட்டு குடும்ப புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறார். இது போல வித்தியாசமான வகையில் வெளியாகும் ‘பாரதிதாசன் காலனி’ சீரியலுக்கான ப்ரோமோக்கள் தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!