க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா – IND vs SL 2வது T20 போட்டி ஒத்திவைப்பு!
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், இன்று 2வது T20 போட்டி நடைபெற இருந்தது. இந்நிலையில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால் இன்றைய போட்டி ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
IND vs SL தொடர்:
இலங்கை சென்றுள்ள இளம் இந்திய அணி ஏற்கனவே ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து T20 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூலை 25ம் தேதி நடைபெற்ற முதல் T20 போட்டியில் இந்திய அணி, இலங்கையை 38 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 164 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. புவனேஷ்வர் குமார், தீபக் சஹர் அபார பந்துவீச்சின் காரணமாக இலங்கை 18.3 ஓவர்களில் 126 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
சென்னை பல்கலை தொலைதூரக்கல்வி தேர்வு முடிவுகள் – நாளை வெளியீடு!
இதனையடுத்து இன்று 2வது T20 போட்டி நடைபெற இருந்தது. கொரோனா பரவலுக்கு மத்தியில் போட்டிகள் நடைபெறுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் இன்று இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களில் இருவர் பிரித்வி ஷா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் டெஸ்ட் தொடருக்காக இங்கிலாந்தில் உள்ள இந்திய அணியுடன் சேர இருந்தது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB
Group” Join Now
அவர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டால் ஆகஸ்ட் 4 முதல் நடைபெற இருக்கும் இங்கிலாந்து தொடரில் பங்கேற்பது கடினமே. தற்போது 2வது T20 போட்டி ஒத்திவைக்கப்பட்டு உள்ள நிலையில் அதற்கான மறுதேதி அறிவிக்கப்படவில்லை.