அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
அஞ்சல் ஆயுள் காப்பீடு முகவர் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் பலரும் வேலையிழந்து தவித்து வரும் நிலையில், கோயம்புத்தூர் அஞ்சல் கோட்டத்தில் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஆயுள் காப்பீடு முகவர்:

தமிழகம் முழுவதும் தற்போது பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இதனால் தற்போது மெல்ல இயல்பு நிலை திரும்பி வந்தாலும் தொழில்துறைகள் முழுவீச்சில் இயங்க தொடங்கவில்லை. இதன் விளைவாக பலரும் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை அஞ்சல் அஞ்சல் கோட்டத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் காப்பீட்டு ஆகிய பணிகளுக்கு நேரடி முகவர்களை தேர்வு செய்வதற்கு வருகிற ஜூலை 15ம் தேதி நடைபெற உள்ளது.

தமிழகத்தில் ஜூலை 12க்கு பிறகு ஊரடங்கு தளர்வுகள் – பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

இந்த தேர்வானது ஏற்கனவே மே 27ம் தேதி நடைபெற இருந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் ஒத்திவைக்கப்பட்டது. கோவை தலைமை தபால் நிலையம், கூட்ஷெட் ரோட்டில் உள்ள கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த தேர்வானது நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்ப படிவம் அனைத்து தபால் நிலையங்களிலும் இலவசமாக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியின் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.

பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) முக்கிய அறிவிப்பு – ரூ.10 லட்சம் வரை நிதியுதவி!

ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிக்கு குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவம், 10ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2, பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் ஜூலை 15ம் தேதி காலை 10 மணிக்கு நேரில் வருகை புரிய வேண்டும். இந்த பணிகளுக்கு கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் விபரங்களுக்கு 0422 255 8541 என்ற எண்ணில் டயல் செய்யலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!