IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IPL 2021: கொல்கத்தா & பஞ்சாப் அணிகளில் மாற்றங்கள் அறிவிப்பு! ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் துவங்க இருக்கும் 14 ஆவது IPL போட்டி தொடரில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அணிகளில் மாற்றம்

இந்தியாவில் ஆண்டு தோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் துவங்கியது. இந்த போட்டிகள் முறையான கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வந்த சமயத்தில் நாடு முழுவதும் கொரோனா 2 ஆம் அலை தீவிரமடைந்தது. இந்நிலையில் IPL போட்டிகளில் கலந்து கொண்டு வந்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட சிலரையும் கொரோனா தொற்று தாக்கியது. அதனால் திட்டமிட்டபடி போட்டிகளை நடத்தமுடியால் போனது.

கோவில் யானைகளுக்கு 15 நாட்களுக்கு ஒரு முறை மருத்துவ பரிசோதனை – அமைச்சர் சேகர்பாபு!

இதை தொடர்ந்து கொரோனா நிலைமை ஓரளவுக்கு சீரானது IPL போட்டிகளை நடத்த திட்டமிட்ட இந்திய கிரிக்கெட் வாரியம், எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு எமீரகத்தில் வைத்து மீதமுள்ள போட்டிகளை நடத்துவதற்கு முடிவு செய்தது. அந்த வகையில் வரும் செப்டம்பர் 19 ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கும் போட்டிகள் அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை தொடர்ந்து UAE சென்றுள்ள அணிகள் IPL போட்டிகளுக்கான பயிற்சிகளில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள T 20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்தே வீரர்கள் ஆயத்தமாகி வருவதால் அவர்கள் IPL தொடரில் இருந்து விலகியுள்ளனர். அதே போல சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் IPL தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். அதனால் IPL தொடரின் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் கலந்து கொள்வதில் சில அணிக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணியை சேர்ந்த ஆஸ்திரேலிய வீரர் பேட் கம்மின்ஸ் IPL தொடரில் இருந்து விலகியுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளார் டிம் சௌதி இணைந்துள்ளார். வலிமையான பின்புலம் கொண்ட டிம் செளதி நியூஸிலாந்து அணிக்காக 305 சர்வதேச ஆட்டங்களில் பங்கெடுத்து சுமார் 603 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரை தொடர்ந்து பஞ்சாப் அணியில் இருந்து விலகிய ஜை ரிச்சா்ட்ஸனுக்கு பதிலாக இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளார் அடில் ரஷீத் மற்றும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸ் அணியுடன் இணைந்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!