கலர்ஸ் தமிழ் சேனலில் மீண்டும் ஒளிபரப்பாகும் “கோலங்கள்” மெகா சீரியல் – மே 16 முதல் தொடக்கம்!

0
கலர்ஸ் தமிழ் சேனலில் மீண்டும் ஒளிபரப்பாகும்
கலர்ஸ் தமிழ் சேனலில் மீண்டும் ஒளிபரப்பாகும் "கோலங்கள்" மெகா சீரியல் - மே 16 முதல் தொடக்கம்!
கலர்ஸ் தமிழ் சேனலில் மீண்டும் ஒளிபரப்பாகும் “கோலங்கள்” மெகா சீரியல் – மே 16 முதல் தொடக்கம்!

சன் டிவியில் 90’ஸ் கிட்ஸ் விருப்பமான சீரியலான “கோலங்கள்” சீரியலை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபலமான வெற்றி பெற்ற சீரியல் தற்போது வருகிற மே 16 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது

கோலங்கள் சீரியல்:

சன் தொலைக்காட்சியில் 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை தேவயானி நடிப்பில் ஒளிபரப்பான மெகா தொடர் கோலங்கள். இந்த சீரியல் 90’ஸ் கிட்ஸ் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி இருந்தார். சன் டிவியில் வெற்றி பெற்ற சீரியல் வரிசையில் இந்த சீரியல் முக்கிய பங்கை பிடித்துள்ளது. இதன் இரண்டாம் பாகம் கூட உருவாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த அளவிற்கு மக்களின் விருப்பமான சீரியலாக இது இருக்கிறது.

Exams Daily Mobile App Download

இந்த சீரியலில் தேவயானி, தீபா வெங்கட், திருச்செல்வம், அஜய் கபூர், பூர்ணிமா இந்திரஜித், மோகன் ஷர்மா, சத்ய பிரியா, அபிஷேக் சங்கர், சுபலேகா சுதாகர், நளினி, வனிதா கிருஷ்ணச்சந்திரன், ஸ்ரீவித்யா மோகன், மஞ்சரி வினோதினி, குயிலி, பாம்பே ஞானம், துவாரகிஷ் ஜிரி என ஒரு பெரிய நடிகர் நடிகைகள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியலில் நடித்ததால் 2003 ஆம் ஆண்டு மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகை விருது தேவயானிக்கு வழங்கப்பட்டது.

கலர்ஸ் தமிழ் “இதயத்தை திருடாதே 2” சீரியலில் இருந்து விலகிய நடிகை ஹிமா பிந்து – ரசிகர்கள் ஷாக்!

கோலங்கள் சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போதும் ஆவலுடன் இருந்ததால் கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி முதல் விகடன் ப்ரைம் டைம் யூடியூப் சேனலில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில் தற்போது கோலங்கள் சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது வருகிற மே 16 ஆம் தேதி முதல் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாக இருக்கிறது. ரீடெலிகாஸ்ட் ஆக இருக்கும் செய்தியை கேட்டு ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் இருக்கின்றனர் மேலும், சிலர் மதியம் 1 மணிக்கு ஒளிபரப்பாக இருப்பதால் நேரத்தை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here