கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு – செப். 2 க்கு விசாரணை ஒத்திவைப்பு!

0
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு - செப். 2 க்கு விசாரணை ஒத்திவைப்பு!
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு - செப். 2 க்கு விசாரணை ஒத்திவைப்பு!
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கு – செப். 2 க்கு விசாரணை ஒத்திவைப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விசாரணை ஒத்திவைப்பு:

நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வழக்கு ஊட்டி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது போலீசார் வழக்கை மீண்டும் விசாரிக்க தொடங்கி உள்ளனர். கொடநாடு வழக்கின் முக்கிய குற்றவாளி என கூறப்படும் சயானிடம் கடந்த 17 ஆம் தேதி நீலகிரி எஸ்.பி ஆசிஷ் ராவத்தும், குன்னூர் டி.எஸ்.பி சுரேஷும் விசாரணை நடத்தினர்.

துரோகம் செய்த அண்ணாமலை, குமுறும் யூடியூபர் மதன் – கே.டி.ராகவன் வீடியோ விவகாரம்!

அதில் அவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார். நீலகிரி எஸ்.பி கூறுகையில், `அவர் வாக்குமூலம் கொடுத்தார், பதிவு செய்து கொண்டோம்’ என்று மட்டும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜின் அண்ணன் தனபாலிடம் நீலகிரி போலீஸார் விசாரணை நடத்தினர். அவர் தொடக்கத்தில் இருந்தே, `தனது சகோதரர் மரணம் விபத்து அல்ல, திட்டமிட்ட கொலை’ என கூறி வந்தார். இந்நிலையில் இன்று இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தது.

TN Job “FB  Group” Join Now

இன்று சயான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். பின்னர், அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான் உதகை மாவட்ட நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம். கொடநாடு வழக்கின் விசாரணை செப்டம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த வழக்கில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியது என நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!