தமிழக விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு – ‘கேலோ இந்தியா’ அணித்தேர்வு! நவ.20 முதல் துவக்கம்!

0
தமிழக விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு - 'கேலோ இந்தியா' அணித்தேர்வு! நவ.20 முதல் துவக்கம்!
தமிழக விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு - 'கேலோ இந்தியா' அணித்தேர்வு! நவ.20 முதல் துவக்கம்!
தமிழக விளையாட்டு வீரர்கள் கவனத்திற்கு – ‘கேலோ இந்தியா’ அணித்தேர்வு! நவ.20 முதல் துவக்கம்!

‘கேலோ இந்தியா’ போட்டிக்கான தமிழக அணி தேர்வு செய்வதற்கான போட்டி சென்னையில் எம்.ஆர்.கே., ஸ்டேடியத்தில் வரும் 20ம் தேதி தொடங்க உள்ளது. இப்போட்டிகள் 26ம் தேதி வரை நடைபெறும் என்று திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

கேலோ இந்தியா:

இந்தியாவில் மாணவர்களிடையே விளையாட்டு திறனை மேம்படுத்தும் நோக்கிலும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர்களை தயார் செய்யும் வகையிலும் திறமை உள்ளவர்களை கண்டறிந்து பயிற்சி அளிக்கும் நோக்குடன் கேலோ இந்தியா என்ற திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பதக்கங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் கேலோ இந்தியா போட்டி விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் வீரர், வீராங்கனையர் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் காவலர்களுக்கு இலவச பஸ் பாஸ் – போக்குவரத்து துறை கடிதம்!

மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து வீரர், வீராங்கனைகளை தேர்வு செய்யவதற்கான விளையாட்டு போட்டிகள் வருகிற 20ம் தேதி முதல் 26-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து திருப்பூர் விளையாட்டு அலுவலர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கேலோ இந்தியா அணி தேர்வுக்கான போட்டியானது சென்னையில் உள்ள ஆர்.கே., ஸ்டேடியத்தில் ஹாக்கி அணிக்கான விளையாட்டு வீரர்களும், ஜே.எம்., மெயின் ஸ்டேடியத்தில் பெண்களுக்கான கால்பந்து விளையாட்டு அணித்தேர்வும் நடைபெறவுள்ளது. நவம்பர் 24ம் தேதி கேலோ இந்தியா கபடி போட்டிக்கு ஆண்கள், பெண்கள் என இரு அணித்தேர்வும் நடைபெறும்.

அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் தலா ரூ.1,100 – முதல்வரின் புதிய திட்டம்!

அதனை தொடர்ந்து 25ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் ஆண்களுக்கான வாலிபால், 26ம் தேதி பெண்களுக்கான வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிகளில் போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் கலந்து கொள்பவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் அடையாள அட்டை, வயது சான்றிதழ், ஏதேனும் அரசு ஆவணம், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றுடன் வந்து நேரடியாக போட்டியில் பங்கேற்கலாம் என திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here