சலாம் ராக்கி பாய்! KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

0
சலாம் ராக்கி பாய்! KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சலாம் ராக்கி பாய்! KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு - ரசிகர்கள் கொண்டாட்டம்!
சலாம் ராக்கி பாய்! KGF 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு – ரசிகர்கள் கொண்டாட்டம்!

KGF 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி படக் குழுவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

KGF 2 ரிலீஸ்:

கடந்த 2018ம் ஆண்டு கன்னட மொழியில் கேஜிஎப் திரைப்படம் வெளியானது. இந்த படம் கன்னட மொழியில் பல சாதனைகளை படைத்தது. அதனால் இந்த படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் மொழிமாற்ற படக்குழுவினர் முடிவு செய்தனர். அதன் பிறகு அனைத்து மாநிலங்களிலும் மொழி மாற்றபட்டு இந்த திரைப்படம் வெளியானது. அனைத்து மொழிகளிலும் இந்த திரைப்படம் பிரம்மாண்ட சாதனையை படைத்தது. அதேபோல் வசூலிலும் சாதனை படைத்தது.

6 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி பள்ளிகள் திறப்பு – வழிகாட்டு நெறிமுறைகள்!

இந்த படத்தின் முதல் பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் 2 வது பாகம் படமாக்கப்பட்டு வருகிறது. 2 வது பாகத்தில் யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ் மற்றும் ரவீனா தண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் கதாநாயகன் யாஷின் பிறந்த நாள் அன்று கேஜிஎப் 2 படத்தின் டீஸர் வெளியானது. அந்த டீஸர் ஒரே நாளில் மில்லியன் லைக்ஸ், பல கோடி வியூஸ் தாண்டிய முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் தற்போது வரை பல சாதனைகளையும் படைத்து வருகிறது கேஜிஎப் 2 படத்தின் டீஸர்.

TN Job “FB  Group” Join Now

முன்னதாக படக்குழுவினர் கேஜிஎப் 2 படம் இந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பரவலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போனது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி கேஜிஎப்-2 திரைப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படத்தின் ஹீரோ யாஷ் டிவீட்டரில், தவிர்க்க முடியாத காரணங்களால் கேஜிஎப் திரைப்படம் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் கேஜிஎப் ரசிகர்கள் மிகுந்தமகிழ்ச்சியில் உள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!