TNPSC 5529 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 23 கடைசி நாள்!

0
TNPSC 5529 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - மார்ச் 23 கடைசி நாள்!
TNPSC 5529 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு - மார்ச் 23 கடைசி நாள்!
TNPSC 5529 காலிப்பணியிடங்களுக்கான முக்கிய அறிவிப்பு – மார்ச் 23 கடைசி நாள்!

தமிழகத்தில் 5529 காலி இடங்களுக்கான குரூப்-2, 2ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி கடைசி நாள் என்று TNPSC அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு அடிப்படையில் குரூப்-2, 2ஏ தேர்வுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

மார்ச் 23 கடைசி நாள்:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப்-2, 2A தேர்வுக்கான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 18ம் தேதி வெளியானது. இந்த அறிவிப்பு அடிப்படையில் தேர்வுக்கு விண்ணப்பிப்பது மற்றும் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பையும் TNPSC வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, நேர்முகத் தேர்வு பதவிகளான இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (11 இடங்கள்), நன்னடத்தை அலுவலர் (2 இடங்கள்), உதவி ஆய்வாளர் (19 இடங்கள்), சார் பதிவாளர் நிலை-2 (17 இடங்கள்), இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் (மாற்றுத்திறனாளி-8 இடங்கள்), சிறப்பு உதவியாளர் (1 பணியிடம்), தனிப்பிரிவு உதவியாளர் (58 பணியிடங்கள்) என மொத்தம் 116 இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல் – ஹாப்பி நியூஸ் சொன்ன அரசு!

இந்த பணிகளுக்கு முதல்நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வு ஆகிய 3 நிலைகளில் தேர்வு நடத்தப்படும். இதனை தொடர்ந்து நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளான, நகராட்சி ஆணையர், நிலை-2 (9 பணியிடங்கள்), முதுநிலை ஆய்வாளர் (291 இடங்கள்), இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் (972 இடங்கள்) உட்பட 5 ஆயிரத்து 413 இடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த இடங்களுக்கு முதல்நிலை, முதன்மை ஆகிய 2 நிலைகளில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுக்கு நேற்று முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

உக்ரைனில் அவசர நிலை பிரகடனம் அமல் – ரஷ்யாவின் போர் அபாயம்! பதட்டத்தில் உலக நாடுகள்!

மேலும் , இந்த 5529 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 23-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பதிவுக்கட்டணமாக ரூ.150 செலுத்தி தங்கள் அடிப்படை விவரங்களை இணையவழி நிரந்தப்பதிவு (OTR) மூலம் கட்டாயப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த பதிவு 5 வருடங்களுக்கு செல்லத்தக்கது. அதன்பிறகு உரிய பதிவுக் கட்டணம் செலுத்தி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து முதல்நிலைத் தேர்வு வருகிற மே மாதம் 21-ந் தேதி நடைபெற உள்ளது. முதல்நிலைத் தேர்வு 200 கொள்குறி வகை வினாக்களுக்கு 300 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்க இருக்கிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!