இனி ரேஷன் கடைகளில் “சோட்டு” 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை – கேரளா அரசு ஒப்புதல்!

0
இனி ரேஷன் கடைகளில்
இனி ரேஷன் கடைகளில் "சோட்டு" 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை - கேரளா அரசு ஒப்புதல்!
இனி ரேஷன் கடைகளில் “சோட்டு” 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை – கேரளா அரசு ஒப்புதல்!

கேரளா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சோட்டு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு மற்றும் சிவில் வழங்கல் துறை அமைச்சர் ஜி.ஆர்.அனில் தெரிவித்துள்ளார்.

எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை:

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 5 கிலோ சமையல் சிலிண்டர்களின் விற்பனை சென்ற மாதம் தொடங்கியது. மேலும் நாடு முழுவதும் உள்ள பல மாநிலங்களில் ரேஷன் கடைகளில் இருந்து 5 கிலோ எடையுள்ள சோட்டு சிலிண்டர்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளன. இந்த சிலிண்டர்கள், நுகர்வோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும். மேலும் ரேஷன் கடைகளிலும் நுகர்வோர் இந்த சிலிண்டர்களை நிரப்பிக்கொள்ளலாம்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் தமிழ் கட்டாயம் – அமைச்சர் அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

அந்த வகையில் கேரளாவில் ரேஷன் கடைகள் மூலம் சோட்டு 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறை ஒப்பந்தம் செய்துள்ளது. அரசின் கே-ஸ்டோர் திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ரேஷன் கடைகள் மூலம் இந்த சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாவட்டங்களில் மொத்தம் 72 கடைகள் கே-ஸ்டோர்ஸ் என முத்திரையிட தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!