அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1000 ஊதிய உயர்வு – அரசு அறிவிப்பு!
கேரளாவில் அரசு அங்கன்வாடி மற்றும் ஆஷா பணியாளர்களுக்கு ரூ.1000 வரை ஊதிய உயர்வு வழங்கப்பட இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஊதிய உயர்வு
கேரள அரசு அங்கன்வாடி மற்றும் ஆஷா (அங்கீகாரம் பெற்ற சமூக நல ஆர்வலர்) பணியாளர்களுக்கு 1,000 ரூபாய் வரை ஊதிய உயர்வை அறிவித்துள்ளது. இது குறித்த அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் வெளியிட்டுள்ளார். இந்த ஊதிய உயர்வின் கீழ் வரும் மொத்தம் 87,977 தொழிலாளர்கள் பயனடைவார்கள்.
ஞாயிற்றுக்கிழமைகளில் அரசு விடுமுறை – மாணவர்கள் அவதி!!
மேலும் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு தற்போதுள்ள ஊதியத்தில் 1,000 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல மற்ற ஊழியர்களுக்கு ரூ. 500 உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய உயர்வால் அங்கன்வாடி 62,852 பணியாளர்களும், 32,989 ஆஷா பணியாளர்களும் பயனடைய இருக்கின்றனர். மேலும் இந்த சம்பள உயர்வு டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.