பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!

0
பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் - மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!
பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் - மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!

பவுலர்களை பந்தாடும் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகம்!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கீரன் பொல்லார்ட் தனது பழைய அதிரடி பார்மிற்கு தற்போது திரும்பியுள்ளார். இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

கீரன் பொல்லார்ட் – மும்பை இந்தியன்ஸ்:

புகழ் பெற்ற IPL போட்டிகளில் வலிமையான அணிகளில் ஒன்று மும்பை இந்தியன்ஸ். சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு அடுத்தபடியாக அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட இந்த அணியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றிருந்தனர். IPL போட்டிகளில் 5 முறை கோப்பை வென்று சாதனை படைத்த அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் கீரன் பொல்லார்ட்.

Tokyo Paralympics 2020: இந்தியாவிற்கு முதல் பதக்கம் உறுதி! இறுதிப்போட்டியில் பவினா படேல்!

அதிரடி ஆட்டக்காரரான இவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பல முறை வெற்றியை தேடி கொடுத்துள்ளார்.  ஆட்டத்தின் போக்கை மாற்றும் வல்லமை கொண்டிருப்பதால் அணியில் நீங்காத இடம் பிடித்துள்ளார். தற்போது Caribbean Premier League போட்டிகளில் விளையாடி வரும் இவர் 30 பந்துகளில் 58 ரன்கள் (6 சிக்ஸர், 3 பவுண்டரி) விளாசி தன் பழைய அதிரடி பார்மிற்கு திரும்பியுள்ளார். இதனால் அடுத்து நடக்க இருக்கும் IPL போட்டிகளில் இதே அதிரடி பார்மில் விளையாடி வெற்றியை தேடி தருவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

2021 போட்டி அட்டவணையில் இருந்து விலகிய தங்க மகன் நீரஜ் சோப்ரா – இதுதான் காரணம்!

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்று வந்த IPL போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் மீதமுள்ள போட்டிகள் வரும் செப் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. தற்போதைய 2021ம் ஆண்டிற்கான தொடரில் போதுமான அளவு பார்மில் இல்லாத பொல்லார்ட் மீண்டும் தனது அதிரடிக்கு திரும்பியுள்ளது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!