விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பின்னுக்கு தள்ளிய கயல் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!

0
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலை பின்னுக்கு தள்ளிய கயல் - TRP ரேட்டிங்கில் முதலிடம்!
விஜய் டிவி 'பாரதி கண்ணம்மா' சீரியலை பின்னுக்கு தள்ளிய கயல் - TRP ரேட்டிங்கில் முதலிடம்!
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலை பின்னுக்கு தள்ளிய கயல் – TRP ரேட்டிங்கில் முதலிடம்!

சமீப காலமாக TRP ரேட்டிங்கில் விஜய் டிவிக்கு ஷாக் கொடுத்து வரும் சன் டிவி சீரியல்கள் கடந்த வார ரேட்டிங்கிலும் முதல் 4 இடங்களை பிடித்துள்ளது. இதில் விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் 5வது இடத்தை பெற்றுள்ளது.

பாரதி கண்ணம்மா:

இப்போதெல்லாம், இன்றைய காலகட்டத்தில் உள்ள பார்வையாளர்களுக்கு ஏற்றபடி டிவி சீரியல்கள் சினிமா பாணியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. முன்பெல்லாம், ஒரு குடும்பம், அதை கெடுக்கும் குடும்ப உறுப்பினர்கள், மாமியார் கொடுமை, கதாநாயகிகளை பழிவாங்குவது என ஒரே மாதிரியான கதைக்களத்துடன் சீரியல்கள் ஒளிபரப்பாகும். ஆனால், இன்று ஒளிபரப்பப்படும் சீரியல்கள் அத்தனையும் ரொமான்ஸ், காதல், நகைச்சுவை, சண்டை காட்சிகள் என பார்வையாளர்களை கவரும் வண்ணம் ஸ்வாரசியமாக எடுக்கப்பட்டு வருகிறது.

TN Job “FB  Group” Join Now

அந்த வகையில், சன், ஜீ தமிழ், கலர்ஸ், விஜய் போன்ற சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மக்களின் மனம் கவர்ந்தவையாக இருக்கிறது. இதில் குறிப்பாக, அதிகபட்ச பார்வையாளர்களை ஈர்ப்பதில் சன் மற்றும் விஜய் டிவிக்கு இடையே ஒரு பெரிய போரே நடந்து வருகிறது. ஏனென்றால், இந்த சேனல்களில் ஒளிபரப்பப்படும் சீரியல்களின் கதைக்களம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு ஒத்துப்போவது போல இருப்பதால் இவை ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது. குறிப்பாக இந்த 2 சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் தான் பெரும்பாலும் TRP ரேட்டிங்கில் டாப் 10 இடங்களில் இருக்கும்.

அந்த வகையில் டிவி சீரியல்களுக்கு பெயர் போன விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் சில சூப்பர் ஹிட் சீரியல்கள், சமீப காலமாக பார்வையாளர்களின் எண்ணிக்கையை இழந்து TRP ரேட்டிங்கில் பின்தங்கிய நிலவரத்தில் காணப்படுகிறது. அதாவது, தமிழ் சின்னத்திரை தொடர்களின் TRP ரேட்டிங்கில் முதல் இடங்களை பிடித்து வந்த விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்கள் இப்போது பார்வையாளர்களை இழந்து வருகிறது. அதற்கு பதிலாக சன் டிவியின் கயல், சுந்தரி போன்ற சீரியல் வித்தியாசமான கதைக்களங்களுடன் ரசிகர்களை ஈர்த்து கொண்டிருக்கிறது.

ராதிகாவின் கைக்காசை மட்டுமே நம்பி இருப்பதால் கோபியை கண்டபடி திட்டிய ராதிகா – பாக்கியாவின் அருமையை உணரும் கோபி!

இப்படி இருக்க, தமிழ் மொழியில் ஒளிபரப்பான ஒட்டு மொத்த சீரியல்களிலும், அதிகபட்ச பார்வையாளர்களின் கவனம் ஈர்த்து கடந்த வார TRP ரேட்டிங்கில் முதல் 5 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் விவரம் தற்சமயம் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன் டிவியின் கயல் சீரியல் வழக்கம் போல முதலிடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து சுந்தரி, வானத்தை போல, ரோஜா உள்ளிட்ட சன் டிவி சீரியல்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்ற ஒரே ஒரு விஜய் டிவி சீரியல், அதுவும் 5வதாக இருப்பது ‘பாரதி கண்ணம்மா’ தான்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here