சன் டிவி “கயல்” சீரியலில் களமிறங்கும் “கல்யாண வீடு” நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

0
சன் டிவி
சன் டிவி "கயல்" சீரியலில் களமிறங்கும் "கல்யாண வீடு" நடிகை - ரசிகர்கள் உற்சாகம்!
சன் டிவி “கயல்” சீரியலில் களமிறங்கும் “கல்யாண வீடு” நடிகை – ரசிகர்கள் உற்சாகம்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு தனி மதிப்பு உண்டு. அந்த வகையில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் “கயல்”. இந்த சீரியலில் தற்போது விறுவிறுப்பை அதிகரிக்க ‘கல்யாண வீடு’ சீரியல் நடிகை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கயல் சீரியல்:

சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் சித்தி, திருமதி செல்வம், நாதஸ்வரம் என பல பிரபலமான சீரியல்கள் மக்கள் மத்தியில் இன்னும் பேசப்பட்டு வருகின்றன. தற்போது கால மாற்றம் காரணமாக இளைஞர்களை கவரும் வகையில் பல சீரியல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் கயல் என்ற புதிய சீரியல் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் ஹீரோவாக விஜய் டிவி ‘ராஜா ராணி’ புகழ் சஞ்சய் நடித்தார். இவர் காற்றின் மொழி என்கிற சீரியலிலும் நடித்திருந்தார்.

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் இருந்து விலகிய ரோஷினியா இது? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

அவருக்கு ஜோடியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். அவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர். ஆனால் அதன் பின் ஜீ தமிழில் யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தது தான் மக்கள் மத்தியில் பிரபலமாகியது. கயல் சீரியலில் ஹீரோ மற்றும் ஹீரோயின் என இருவருமே மக்களிடம் பிடித்தமானவர்கள் என்பதால் அறிமுகம் செய்யப்பட்ட முதல் வாரத்திலேயே TRP யில் முதலிடத்தை பிடித்தது.

கர்ப்பமாக இருக்கும் “ராஜா ராணி 2” ஆல்யாவிற்கு மாமியார் கொடுத்த பரிசு – ட்ரெண்டான வீடியோ!

அடுத்தடுத்த வாரங்களில் TRP யில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்த கயல் சீரியலில் விறுவிறுப்பை அதிகரிக்க தற்போது புதிதாக ஒரு நடிகையை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி ‘கல்யாண வீடு’ சீரியல் பிரபலம் நடிகை ஹேமா ஸ்ரீகாந்த் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் அறிமுகம் செய்யப்பட்டு கதையில் எந்த மாதிரி மாற்றங்கள் இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!